Tuesday, April 8, 2008

Puttaparthi VI

இம்மாதிரி முக்கிய விழாக்கள் நடைபெறும் சமயங்களில் சிரி சைலம்(Sri Sailam) மாணவர்களையும் அனந்தபூர் மகளிர் கல்லூரி மாணவிகளையும்(Ananthapur Ladies College) கல்லூரி பஸ் மூலம் அழைக்கச் செய்து அவர்களையும் மேற்படி விழாக்களில் பங்கு பெறச் செய்து மகிழ்விக்கிறார் பாபா. இம்மாதிரி விழா சமயங்களிலெல்லாம் பகவான் பாபா அவர்கள் நமக்காக தெய்வீக அருளுரைகள் தமது சுந்தரத் தெலுங்கில் வழங்கியும் (இதற்கு ஆங்கிலத்திலும் சமயங்களில் தமிழிலும் மொழி பெயர்ப்பு செய்கிறார்கள்-Translation) பஜன் பாடல்களை தம் இனிய குரலில் பக்தி பாவத்துடன் உணர்சிகரமாய்ப்பாடியும் விழா நிறைவு செய்கிறார்.



இவ்விழாவில் வழங்கிய அருளுரைகள் யாவும் “சனாதன சாரதி” என்னும் ஆன்மீக நூலில் தொடர்ந்து மாதந்தோறும் வெளிவருகின்றன. சனாதன சாரதி இதழ் தமிழ், ஆங்கிலம் ,தெலுங்கு, மலையாளம் ஆகிய இன்னும் பிற மொழிகளிலும் வெளிவருகின்றன. சனாதன சாரதி தமிழ் பிரதி வருட சந்தா ரூபாய் 50/-ம் பதினைந்து ஆண்டிற்கு Rs.500-ம் நிர்ணயித்து இருக்கிறார்கள்.

பகவான் பாபாவின் அருளுரைகளில் இருந்து வேத உபநிசத்துக்கள் பகவத்கீதை, பாகவதம் ராமாயணம், மகாபாரதம் ,பிரகலாதன், கோபியர் பக்தி, பைபிள், குரான் ,திருக்குறள் புத்தர், ஆதிசங்கரர் “தியாகராஜர் கீர்த்தனை” – ராமகிருஷ்ண பரமஹம்ஷர், விவேகானந்தர், மஹத்மா காந்தி “பெற்றோரின் மகிமை” பற்றிய உன்னதக் கருத்துக்களே வெகுவாக வெளிப்படுகின்றன.
“LOVE ALL – SERVE ALL”,



“LOVE IS GOD, LIVE IN LOVE”,


“HELP EVER HURT NEVER”






3 comments:

  1. நல்ல ஒரு பதிவு. மேலும் பல பதிவுகளை படிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிரேன். வெங்கட்.

    ReplyDelete
  2. "(இதற்கு ஆங்கிலத்திலும் சமயங்களில் தமிழிலும் மொழி பெயர்ப்பு செய்கிறார்கள்-Translation)" இதை Translation-னுக்கு பதிலாக Interpretation என்று கூறினால் நன்றாக இருக்குமே.

    ReplyDelete
  3. நன்றி வெங்கட்!
    உங்களது விருப்பப்படி பதிவுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    2. நன்றி அன்பரே
    உங்களது கருத்து சரியானதே. ஆலோசனைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete