Tuesday, April 29, 2008

சத்ய வார்த்தை


மனம் அலைபாயும் போது திரும்ப திரும்ப மனதிற்குள் “நான் குரங்கல்ல, மனிதன்” என்று சொல்லிக்கொள்ளுங்கள்.


ஆடம்பரத்திற்கு செலவிடும் தொகையை இல்லாதவர்க்கும், இயலாதவருக்கும், பயன்படும் விதமாக செலவழியுங்கள்.


ஏழைகளுக்கு செய்யப்படும் சேவையில் மகிழும் இறைவன், உங்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்.


பணிவு இல்லாத இடத்தில் இருக்கும் கணக்கற்ற செல்வத்திற்கு,ஒரு மதிப்பும் கிடையாது.


கடமையைச் செய். பலனுக்காக கையேந்தாதே. இதுவே மிகப் பெரிய வேள்வியாகும்.


உன் கடமையை ஆற்ற வேண்டி பிரார்த்தனை செய். கட்டாயம் உன் பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்ப்பார்.


அடுத்தவர்களுடைய துன்பத்தை நம்முடன் இணைத்துப் பார்த்து அவர்களுடைய துன்பத்தை களைய முயற்ச்சி செயுங்கள்.


எந்த ஒரு செயலைச் செய்தாலும் மற்றவருடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை வாழாதீர்கள்.


சேவை செய்வதை விட உயர்ந்த பலனும், சத்தியத்தை கடைப்பிடிப்பதைவிட உயரிய தர்மமும் கிடையாது. இவ்விரன்டையும் செய்பவர்களுக்கு கடவுள் தானாகவே விரும்பி வந்து அருள் செய்கிறார்.


ஒருவரிடம் அன்பு செலுத்தும் போது, இறைவன் உங்களிடம் அதைவிட பல மடங்கு அதிகமான அன்பு செலுத்துகிறார்.


அனைவரையும் கடவுளாகப் பாருங்கள். அவ்வாறு பார்க்கும்போது மற்றவர்களின் குறை கண்ணுக்குத் தெரியாது. பயனில்லாத எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காது.


கல்தூணை, பனித்துளிகளால் கரைக்க முடியாததைப்போல, மனதில் உள்ள நல்ல எண்ணங்களை, யார் தாழ்த்தி பேசினாலும் ஒன்றும் ஆகிவிடாது.


இறைவன் உங்களது குலம், கோத்திரம், பணம், பதவி இவற்றில் எதையும் பார்ப்பதில்லை. நேர்மை, தூய்மை ஆகியவைகளையே பார்க்கிறார்.


ஒருவருக்கு இன்பம் தரும் பொருள். மற்றொருவருக்கு துன்பத்தைத் தருகிறது. ஆகவே, இன்பம் என்பது ஒவ்வொருவரின் மனதில் தான் இருக்கிறது.


இறைவனிடம் பிரார்த்தனை செய்வதோடு உங்களது கடமை முடிந்து விட்டது. அதனை நிறைவேற்றுவதும், நிறைவேற்றாததும் இறைவன் கையில் தான் இருக்கிறது.


---- Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

3 comments:

  1. It is very useful in life to follow the sathiya varthai words

    ReplyDelete
  2. It is very useful in life to follow the"SATHIA VARTHI" words

    ReplyDelete
  3. Thank you for your visit and comments.

    Jai Sai Ram

    ReplyDelete