Sunday, September 26, 2010

என்ன விதிமுறையோ?

தேனியிலிருந்து ஆண்டிப்பட்டிக்கு ஒரு பெண்மணி சின்ன அட்டைப்பெட்டியுடன் பஸ்ஸில் ஏறினார். அட்டைப்பெட்டியில் முட்டை இருப்பதாக சொன்னதற்கு அதற்கு லக்கேஜ் சார்ஜ் உண்டு என்றும் டிக்கெட் வாங்க வேண்டும் என்றும் நடத்துனர் வலியுறுத்தினார். சின்ன அட்டைப்பெட்டியில் உள்ள முட்டைக்கு லக்கேஜ் சார்ஜ்கொடுக்கவேண்டும் என்று உலகத்தில் எந்த நடத்துனரும் கோரமாட்டார்கள் என அப்பெண்மணி கூற பதிலுக்கு நடத்துனர் டிக்கெட் எடுக்க இஷ்டம் இல்லை என்றால் என் கைக்காசு போட்டு டிக்கெட் போட்டுக்கொள்கிறேன் எனக் கூறவும் அம்மணி முட்டைக்கு டிக்கெட் வாங்கினார். சின்ன அட்டைப்பெடிக்கு லக்கேஜ் சார்ஜ் உண்டா? என்ன விதிமுறையோ?

No comments:

Post a Comment