Saturday, February 19, 2011

கார்லிக் ரைஸ்

தேவையானவை:

பொன்னி பச்சரிசி- கால் கிலோ

உரித்த பூண்டு --- ஐம்பது கிராம்

சின்ன வெங்காயம் ----“

உளூந்து ----- ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு----ஒரு டீஸ்பூன்

நல்லெண்ணெய் -----நூறு மில்லி

கறிவேப்பிலை-----சிறிதளவு

இஞ்சி ----- சிறிதளவு

மிளகாய் வற்றல் ----- ஆறு

புளி ----- சிறிதளவு

உப்பு ------- தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊறவைத்து பின் சாதம் வடிக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்தை, கடலைப்பருப்பையும் வறுக்க வேண்டும். புளி, பெருங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவேண்டும். புளி, பெருங்காயப்பவுடர் சேர்த்து வதக்கி ஆற வைக்கவும். இதனுடன் தேவையான அளவு உப்புச்சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும். இந்த பூண்டு கலவையை, வடித்த சாதத்தில் பிசைந்தால் பூண்டு சாதம் தயார்.

No comments:

Post a Comment