காட்சிகளில் இருவகை உண்டு. ஒன்று புறக் காட்சி. புலன்களால்
அறிவது. மற்றது அகக் காட்சி. மனதால் அறிவது. புறக் காட்சிக்கு புலன்கள் கருவிகள். அதனால் அதற்கு எல்லை (limitation). உண்டு.
அக்காட்சிக்கு மனம் கருவி. அது எதையும் ஊடுருவிச் செல்வதால்
அதற்கு எல்லைகள் இல்லை.
இப் பிரபஞ்சத்தில் புலன்களைக் கொண்டு அணுமுதல் அண்டங்கள்
வரை நாம் அறியலாம். மனத்தினால் அறியப் படுவது உயிர்.
அவ்வுயிர் தான் அனைத்துப் பொருள்களுக்கும் விண்ணாக உள்ளது.
அந்த விண்ணிற்கு மூலம் தான்.இறைநிலை.
அகக் காட்சிகளை அறிய மனம்..நுண்ணிய..நிலைக்குச் செல்ல
வேண்டும். இதை யோகம் அல்லது..தியானம் செய்பவர்கள் தவிர
மற்றவர்களால் அறிய முடியாது. இதை மறைபொருள் என்றார்கள்..
சுரங்கப் பாதை என்பது மறைவான வழி. அதன் நுழைவாயிலைக்
கண்டால்தான் நாம் உள்ளே செல்ல முடியும். அதுபோல்..மனதைப் பற்றி
அறிகின்ற நுழைவாயில் மனிதனுக்குள்ளேயே இருக்கின்றது. மனதை
அறிந்து அதை இதமாக நடத்தக் கூடிய ஆற்றல் பெறும் போது
மாமனிதனாகிறான். இத்தகு மறைபொருளை அறிய தெளிந்த
நல்ல குருவின் துணை வேண்டும்.
இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன்!!!
No comments:
Post a Comment