ஜெய் ஶ்ரீ ராம் . மஹாபெரியவா திருவடிகள் சரணம்
இன்று ஶ்ரீ ஆதிசங்கரர் அருளிய ஶ்ரீவைத்யநாதாஷ்டகம் அர்த்தத்துடன் படித்துப் பிரார்த்திப்போமே .
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ /
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ //
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ /
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ
மஹாதேவ மஹாதேவ மஹாதேவ மஹாதேவ //
1)
ஶ்ரீராம ஸௌமித்ரி ஜடாயுவேத
ஷடாநநாதித்ய குஜார்ச்சிதாய /
ஶ்ரீ நீலகண்ட்டாய தயாமயாய
ஶ்ரீ வைத்யநாதாய நம:சி’வாய //
ஶ்ரீராம ஸௌமித்ரி ஜடாயுவேத
ஷடாநநாதித்ய குஜார்ச்சிதாய /
ஶ்ரீ நீலகண்ட்டாய தயாமயாய
ஶ்ரீ வைத்யநாதாய நம:சி’வாய //
மருத்துவர்களுக்கெல்லாம் அரசனான மாமருந்தான ஶ்ரீ வைத்யநாதனை,ராம,லக்ஷ்மணர் தொழுத சி’வனை,ஜடாயு வழிபட்ட சி’வனை,நான்மறைகளும்,முருகக்கடவுளும் தொழுத சி’வனை,சூரியனும் ,செவ்வாயும் தொழுதேத்தும் சி’வனை ,காருண்ய மூர்த்தியான நீலகண்டனை ,ஶ்ரீ வைத்யநாதனை அடியேனும் தாள் வணங்கித் தொழுது நிற்கிறேன் .
2)
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய
த்ரிலோசநாய ஸ்மரகால ஹந்த்ரே /
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஶ்ரீ வைத்யநாதாய நம: சி’வாய //
கங்காப்ரவாஹேந்து ஜடாதராய
த்ரிலோசநாய ஸ்மரகால ஹந்த்ரே /
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய
ஶ்ரீ வைத்யநாதாய நம: சி’வாய //
மருத்துவர்களுக்கெல்லாம் அரசனான மாமருந்தான ,ஶ்ரீ வைத்யநாதனை ,பொங்கிப் பிரவஹிக்கும் கங்கையையும்,சந்திரனையும் சிரசில் தரித்த சி’வனை,மூன்று கண்களை உடையவரும்,மன்மதனையும்,எமனையும் வதைத்த சி’வனை,தேவர்களும் தொழுதேத்தும் ஶ்ரீ வைத்யநாதனை அடியேனும் தாள் வணங்கித் தொழுது நிற்கிறேன் .
3)
பக்திப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிநே துஷ்டஹராய நித்யம் /
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்ய லோகே
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
பக்திப்ரியாய த்ரிபுராந்தகாய
பிநாகிநே துஷ்டஹராய நித்யம் /
ப்ரத்யக்ஷலீலாய மநுஷ்ய லோகே
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
மருத்துவர்களுக்கெல்லாம் அரசனான மாமருந்தான ஶ்ரீ வைத்யநாதனை,தன் பக்தர்கள் மீது அளப்பரிய அன்புடையவரை,முப்புரத்தை எரித்த சி’வனை,பிநாகம் என்னும் வில்லேந்தி அனுதினம் துஷ்டர்களை வதைப்பவரை, மானிடர்கள் மத்தியில் கண்டு இறைவன் சக்தியை உணரும் வண்ணம் பல லீலைகள் புரியும் ஶ்ரீ வைத்யநாதனை, அடியேனும் தாள்வணங்கித் தொழுது நிற்கிறேன் .
4)
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரணாச’ கர்த்ரே முநிவந்திதாய /
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக
ப்ரணாச’ கர்த்ரே முநிவந்திதாய /
ப்ரபாகரேந்த்வக்நி விலோசநாய
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
மருத்துவர்களுக்கெல்லாம் அரசனான மாமருந்தான
ஶ்ரீ வைத்யநாதனை,கீல்வாதம்,முடக்குவாதம் முதலான அனைத்துவிதமான பிணிகளையும் முற்றும் களையும் சி’வனை,முனிவர்கள் போற்றும் சி’வனை,சூரியன்,சந்திரன்,அக்னி ஆகியோரைத் தன் மூன்று கண்களாய் உடைய ஶ்ரீ வைத்யநாதனை அடியேனும் தாள்வணங்கித் தொழுது நிற்கிறேன் .
ஶ்ரீ வைத்யநாதனை,கீல்வாதம்,முடக்குவாதம் முதலான அனைத்துவிதமான பிணிகளையும் முற்றும் களையும் சி’வனை,முனிவர்கள் போற்றும் சி’வனை,சூரியன்,சந்திரன்,அக்னி ஆகியோரைத் தன் மூன்று கண்களாய் உடைய ஶ்ரீ வைத்யநாதனை அடியேனும் தாள்வணங்கித் தொழுது நிற்கிறேன் .
5)
வாக் ச்’ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ :
வாக் ச்’ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய /
குஷ்டாதி ஸர்வோந்நத ரோக ஹந்த்ரே
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
வாக் ச்’ரோத்ர நேத்ராங்க்ரி விஹீநஜந்தோ :
வாக் ச்’ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய /
குஷ்டாதி ஸர்வோந்நத ரோக ஹந்த்ரே
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
மருத்துவர்களுக்கெல்லாம் அரசனான மாமருந்தான ஶ்ரீ வைத்யநாதனை,பேச்சிழந்த, கேட்கும் திறனற்ற,பார்வை இழந்த , நடக்க இயலாத குறைகளை உடையவர்களுக்கருளி அவர்தம் குறைகளை நீக்கிச் செயல்படவைக்கும் இறைவனை,கொடிய நோய்களான குஷ்டம் முதலான பிணிகளை நீக்கி அருளும் ஶ்ரீ வைத்யநாதனை அடியேனும் தாள்வணங்கித் தொழுது நிற்கிறேன்.
6)
வேதாந்த வேத்யாய ஜகந்மயாய
யோகீச்’வரத்யேய பதாம்புஜாய /
த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்னே
ஶ்ரீ வைத்யநாதாய நம :சி’வாய //
வேதாந்த வேத்யாய ஜகந்மயாய
யோகீச்’வரத்யேய பதாம்புஜாய /
த்ரிமூர்த்தி ரூபாய ஸஹஸ்ர நாம்னே
ஶ்ரீ வைத்யநாதாய நம :சி’வாய //
மருத்துவர்களுக்கெல்லாம் அரசனான மாமருந்தான ஶ்ரீ வைத்யநாதனை ,வேதாந்தங்களால் அறியப்படும் இறைவனை,இந்தப்பிரபஞ்சம் முழுமைக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சி’வனை,முனிவர்கள் எப்பொழுதும் தியானித்து நிற்கும் கமலத்திருவடிகளை உடைய இறைவனை,படைத்தல்,காத்தல்,அழித்தல் என்ற முத்தொழில்களின் ஸ்வரூபமாகவும்,அவற்றைக் கடந்தும் நிற்கும் ஆயிரம் திவ்ய நாமங்களை உடைய ஶ்ரீவைத்யநாதனை அடியேனும் தாள்வணங்கித் தொழுது நிற்கிறேன் .
7)
ஸ்வதீர்த்த ம்ருத்பஸ்ம ப்ருதங்க பாஜாம்
பிசா’ச து : க்கார்த்தி பயாபஹாய /
ஆத்ம ஸ்வரூபாய ச’ரீர பாஜாம்
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
ஸ்வதீர்த்த ம்ருத்பஸ்ம ப்ருதங்க பாஜாம்
பிசா’ச து : க்கார்த்தி பயாபஹாய /
ஆத்ம ஸ்வரூபாய ச’ரீர பாஜாம்
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
மருத்துவர்களுக்கெல்லாம் அரசனான மாமருந்தான
ஶ்ரீ வைத்யநாதனை ,பூத ,பைசா’சங்களால் ஏற்படும் பயங்களையும்,துன்பங்களையும்,தீர்த்தஸநானம் மூலமாகவும்,திருநீறு பூசுவதன் மூலமாகவும்,ஆலயத்தில் உள்ள ஸ்தல விருக்ஷத்தின் (வேப்பமரம் போன்றவை ) கீழ் உள்ள மண்ணைத் தரிப்பதன் மூலமாகவும் முற்றும் நீங்கச்செய்யும் சி’வனை,நம் உடலில் ஆத்மஸ்வரூபமாய் விளங்கும் ஶ்ரீ வைத்யநாதனை அடியேனும் தாள்வணங்கித் தொழுது நிற்கிறேன்.
ஶ்ரீ வைத்யநாதனை ,பூத ,பைசா’சங்களால் ஏற்படும் பயங்களையும்,துன்பங்களையும்,தீர்த்தஸநானம் மூலமாகவும்,திருநீறு பூசுவதன் மூலமாகவும்,ஆலயத்தில் உள்ள ஸ்தல விருக்ஷத்தின் (வேப்பமரம் போன்றவை ) கீழ் உள்ள மண்ணைத் தரிப்பதன் மூலமாகவும் முற்றும் நீங்கச்செய்யும் சி’வனை,நம் உடலில் ஆத்மஸ்வரூபமாய் விளங்கும் ஶ்ரீ வைத்யநாதனை அடியேனும் தாள்வணங்கித் தொழுது நிற்கிறேன்.
8 )
ஶ்ரீ நீலகண்ட்டாய வ்ருஷத்வஜாய
ஸ்ரக்கந்த பஸ்மாத்யபி சோ’பிதாய /
ஸுஃபுத்ர தாராதி ஸுபாக்யதாய
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
ஶ்ரீ நீலகண்ட்டாய வ்ருஷத்வஜாய
ஸ்ரக்கந்த பஸ்மாத்யபி சோ’பிதாய /
ஸுஃபுத்ர தாராதி ஸுபாக்யதாய
ஶ்ரீ வைத்யநாதாய நம : சி’வாய //
மருத்துவர்களுக்கெல்லாம் அரசனான ,மாமருந்தான ,ஶ்ரீ வைத்யநாதனை, நீலகண்டனை,ரிஷபக்கொடியுடைய இறைவனை,மலர் அலங்காரங்களினாலும்,திருநீற்றுப் பூச்சாலும்,சந்தனத்தாலும் மிளிரும் சி’வனை,நல்ல வாழ்க்கைத்துணையையும்,நற்சந்ததிகளையும்,சகல சௌபாக்கியங்களும் அருளும் ஶ்ரீ வைத்யநாதனை அடியேனும் தாள்வணங்கித் தொழுது நிற்கிறேன் .
9)
பாலாம்பிகேச’ வைத்யேச’
பவரோக ஹரேதி ச /
ஜபேந்நாமத்ரயம் நித்யம்
மஹாரோக நிவாரணம் //
பாலாம்பிகேச’ வைத்யேச’
பவரோக ஹரேதி ச /
ஜபேந்நாமத்ரயம் நித்யம்
மஹாரோக நிவாரணம் //
அனுதினம் மூன்று வேளைகளிலும் மேற்கண்ட ஶ்ரீ வைத்யநாதாஷ்டகத்தை பக்தி சிரத்தையுடன் சொல்லி பாலாம்பிகை ஸமேத ஶ்ரீ வைத்யநாதனை வழிபட அனைத்து வகையான பிணிகளும் ,பவரோகமும், அகலும் என்பது திண்ணம்.
மஹாபெரியவா திருவடிகள் சரணம்
ஜெய் ஶ்ரீ ராம்
ஜெய் ஶ்ரீ ராம்
No comments:
Post a Comment