Saturday, March 22, 2008

GIFT

தரிசனத்தின் பேரருள்/வெகுமதி
என் தரிசனத்திற்குப் பின் ,எப்பொழுதும் ஒரு அமைதியான தனி இடத்தை நாடுங்கள். தரிசன நேரத்தில் நான் உங்களை கடந்து செல்லும் பொழுது என்னுடைய ஆன்மீக சக்தி வெளிப்பட்டு உங்களை அடைகிறது. தரிசனத்திற்க்குப்பின் நீங்கள் பேச முற்பட்டால், நீங்கள் பெற்ற அச் சக்தி வீணடிக்கப்பட்டு என்னிடமே திரும்பி வந்துவிடுகிறது. ஒன்றை மட்டும் உறுதியாக நம்புங்கள். என் கண்கள் எவைகளை நோக்குகின்றனவோ அவை உயிரூட்டப்பட்டு உயர் நிலைக்கு மற்றமடைகின்றன. நீங்களும் அவ் விதமே என்னுடைய சக்தியினால் நாளுக்கு நாள் மாற்றமடைகிறீர்கள், என்னுடைய தரிசனத்தால் ஏற்படும் நற்பலன்களை ஒரு பொழுதும் குறைத்து மதிப்பிடாதிர்கள்.அதை நீங்கள் இங்கே ஒவ்வொரு நாளும் எளிதில் பெறுகிறீர்கள்! அதற்காக நன்றியுணர்வுடன் செயல்படுங்கள்.
எவர் ஒருவருக்கு அருள் அதிகமாக வழங்கப்படுகிறதோ அவரிடமிருந்து அதிகமாகவே எதிர்பார்க்கப்படும். இதையும் நினைவில் கொள்ளுங்கள்.
பகவான் ஸத்ய ஸாய் பாபா

No comments:

Post a Comment