
பகவான் சத்ய சாய் பாபாவின் அன்பு ஆணை நவ நெறிகள்
1. தினசரி தியானமும் ஜபமும் செய்ய வேன்டும்.
2. வாரம் ஒரு முறை அவரவர் வீட்டில் குடும்பத்தினருடன் பஜனை செய்ய வேன்டும்.
3. குழந்தைகளை பாலவிகாஷ் வகுப்பு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளச் செய்யவேன்டும்.
4. சமூகப் பணி முதலான சத்ய சாய் நிறுவனம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும்.
5. மாதம் ஒருமுறை யாவது சத்ய சாய் நிறுவனம் நடத்தும் பொது பஜனை நகர சங்கீர்த்தனத்தில் கலந்து கொள்ளவேன்டும்.
6. சாயி இலக்கியத்தை மற்றும் ஆன்மீக நூல்களை ஒழுங்காக ஊன்றிப் படிக்க வேன்டும்.
7. ஒவ்வொருவரிடமும் மெதுவாகவும் பணிவாகவும் அன்பாகவும் பேச வேன்டும்.
8. மற்றவர்களைப் பற்றி முக்கியமாக அவர்கள் எதிரில் இல்லாதபோது குறையாகவோ, தவறகவோ பேசக் கூடாது.
9. நாராயன சேவை செய்ய வேன்டும். உணவு வேண்டி கஷ்டப்படுகிறவர்களுக்கு உணவிட தினந்தோறும் சிறிது அரிசியை தானியங்களைத் தனியாக எடுத்து வைக்க வேன்டும். உணவை வீணாக்குவது கூடாது.
No English at all??? Only Tamil and French?????
ReplyDeleteThank you for your suggestion.
ReplyDeleteIf you have Elnglish articles, please send to me I will publish the same.