
பிரசாந்தி மந்திரில் மூல ஸ்தானத்தில் வெள்ளியினால் செயப்பட்ட சேஷ வாகனத்தில் அழகு பொருந்திய திருவாட்சியின் கீழ் பாபாவின் முந்தய அவதாரமாகிய சிரடி சாயி பாபா வீற்றிருக்கிறார். அவரது வலது பக்கம் அவருடைய முழுத்தோற்றம் கொண்ட படமும் இடது பக்கம் சத்ய சாயிபாபாவின் முழுத்தோற்றம் கொண்ட படமும் சிரடி பாபாவின் படத்தின் மேல் வெள்ளியினால் செதுக்கப்பட்ட சிவபெருமான் ஆனந்த தாண்டவ தோற்றமும், சத்ய சாய் பாபாவின் படதின் மேல் வெள்ளியினால் செதுக்கப்பட்ட காளிங்க நர்த்தன தோற்றமும் தெரிகின்றன. மூலஸ்தான சிரடி பாபாவின் கீழ் சத்ய சாயி பாபாவிற்கு அண்மையில் சமர்ப்பணம் செய்யப்பட்ட தங்கப் பாதுகைகளை தாமரை மலர்ப்பீடம் ஏந்தியிருக்கும் எழில் வடிவம் காணலாம். பூஜை மேடையின் முன் சுடர்விடும் 5 குத்து விளக்குகளும், ராமர், சீதை ,லட்சுமணர், ஆஞ்ஜநேயர், முரளீதரன் விக்ரஹங்களும் காட்சி தருகின்றன. இப் பூஜை மேடையின் எதிர்புறம் குரு ஷேத்திர காட்சிகளும், பகவான் கிருஷ்ணர் ரதத்தில் அமர்ந்துகொண்டு அர்ஜுனனுக்கு உபதேசம் செயுயும் கவின் மிகு வண்ணநிறம் கொண்ட சிலைகள் பார்ப்பதற்கு தத்ரூபமாய் இருக்கின்றன. ஹாலின் இருபக்க சுவர்களிலும் தசாவதார விக்ரகங்கள் அழகாக காட்சிதருகின்றன. சரவிளக்குகளுடன் கூடிய இப் பூஜை ஹால் எல்லோருக்கும் மனச் சாந்தி அளிக்கும் மகிமை கொண்டது.
No comments:
Post a Comment