பாரெங்கிலும் உள்ள பற்பல நட்டு மக்கள் குறிப்பாக வெளினாட்டினர் அமெரிக்கா, ருஸ்யா, ஐரோப்பா, ஜெர்மன் ,ஜப்ப்பன், சீனா, சிங்கப்பூர் , மலேசியா, இலங்கை என்னும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்கள், பெண்கள் யாவரும் தினந்தோறும் புட்டபர்த்திக்கு வருகை புரிந்தும் பகவான் பாபாவிடம் தம் பிரேமை மிகுந்த பக்தி செலுத்தியும் வாழ்வில் “மனச் சாந்தி” பெறுகின்றனர். மாதக் கணக்கில் அங்கு தங்கியிருந்து “ஆத்மபலம்” பெறுகின்றனர். நம் இந்துமத தெய்வ நாமங்கள் அடங்கிய பஜன் பாடல்களை வெளினாட்டினர் பக்தியுடனும் தகுந்த இசைக் கருவிகளுடனும், சிரத்தையாக பாடுவதை கேட்க நமக்கு பரமானந்தம் ஏற்படும். “சாய்ராம்” என்று வெளி நாட்டினர் புன்முறுவலுடன் நம்மைப் பார்த்து சொல்லும் பொழுது நம் உள்ளமெல்லம் பூரிக்கும். “என்னே பாபாவின் மகிமை” என எண்ணத்தோன்றும்.
புட்டபர்த்தியில் படித்து வரும் பள்ளி கல்லூரி மணவர்கள் இனிய தோற்றத்துடனும் வெண்மையான சீருடையிலும், காட்சி அளிப்பதும், அவர்களிடம் காணப்படும் முகப் பொலிவு, அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவை பாராட்டத்தக்கவை. பாபா அவர்கள் எல்லா மாணவர்களிடமும் தம் தாயன்பைக் காட்டுவார். சமயத்தில் கண்டிப்புடனும் இருப்பார்.
.....தொடரும்
1 comment:
ok sir.
Post a Comment