Followers

Sunday, June 5, 2016

கறிவேப்பிலை மருத்துவப் பயன்கள்

உணவு வகைகளில் ருசிக்கும், மணத்திற்கும் சேர்க்கப்படும் இலையாகத்தான் கறிவேப்பிலையை பலரும் கருதுகிறார்கள். கறிவேப்பிலை அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றது.
* கறிவேப்பிலையை, எலுமிச்சை சாறில் அரைத்து அரை மணிநேரம் கழித்து குளியுங்கள். அவ்வாறு செய்தால் பேன், பொடுகு, ஈறு போன்றவை நீங்கும்.
* கறிவேப்பிலை, கற்றாழை, மருதாணி போன்றவைகளை சேர்த்து எண்ணையில் காய்ச்சி தலையில் தேய்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
* தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலை சேர்த்தால், கண்களின் பார்வை சக்திக்கு நல்லது. கறிவேப்பிலையும் ஒருவகை கீரைதான். அதில் வைட்டமின்- ஏ இருக்கிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்து சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.
* கறிவேப்பிலையை சிறிதளவு அரைத்து, வெறும் வயிற்றில் சுடுநீரை பயன்படுத்தி விழுங்கிவந்தால், உடலில் இருக்கும் கொழுப்பு குறைய வாய்ப்புண்டு.
* இறைச்சி சாப்பிட்டுவிட்டு ஜீரணத் தொல்லை ஏற்படுகிறவர்கள் இஞ்சி, கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து, மோரில் கலக்கி குடிக்கவேண்டும்.
* உணவில் சேர்த்துக் கொள்ள கண் பார்வை பெருகும், தலை முடி செழித்து வளரவும் உதவும்.

ஆயுஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

ர்வேதம்ம

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

ற்றும் சித்த மருத்துவம்.

No comments: