சாதி, மதம், மொழி பாகுபாடு :
நான் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவன், எதிரானவன். மொழிப் பாகுபாடு எனக்கில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் இசை என்ற ஒரே மொழிதான். சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டு லயித்துப் பாடுகின்றவர்களுக்கு நான் சந்தர்ப்பம் தருகிறேன். எந்த மொழிக்காரர்கள் பாடுகிறார்கள் என்பது எனக்கு முக்கியம் அல்ல. எப்படிப் பாடுகிறார்கள் என்பதுதான் எனக்கு முக்கியம்.
அவனும் இசையமைப்பாளனே!
வயல் காட்டில்வேலை செய்து கொண்டிருக்கும் ஓர் எளிய மனிதன், தன் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகச் செய்யும் வேலையில் லயித்துப் போய்ப்பாடுகிறானே, அதுவும் சங்கீதம்தான். அவனும் ஒரு விதத்தில் இசையமைப்பாளன்தான்.
நானும் ஒழுக்கமும்!
கடவுள் பக்தி, ஒழுக்கம் ஆகியவற்றில் நான் மேன்மை பெற்றிருக்கிறேன் என்று யார் சொன்னது?.
பிறர் கண்களுக்கு நான் ஒழுக்கமுள்ளவனாக இருப்பதில் பிரயோஜனமில்லை. எனக்கு ஒழுக்கமாக நான் நடந்தால்தான், நான் உயர்ந்தவன், மேன்மை பெற்றவன். நீங்கள் ஒரு மாதிரியான பாடல்களுக்கு இசையமைக்கலாமா என்று கேட்கிறார்கள். கடவுள்தானே இந்த ஒரு மாதிரியான எண்ணத்தை நமது தாய் தந்தைக்குக் கொடுத்து நம்மைப் பிறக்க வைத்தார்? அவரே என்னை இதற்கு இசையும் அமைக்கச்சொன்னால் அதைக் குறை சொல்வதற்கு நாம் யார்?
யார் சங்கீதக்காரன்?
புதிய இசை வடிவத்தால்தான் ஒருவன் நல்ல சங்கீதக் கலைஞனா, என்றால், அவர்கள் என்ன, எந்தக் கொம்பனுமே ‘சரிகமபதநி’ என்ற ஒரு வட்டத்துக்குள்ளேதான் சுற்றியாக வேண்டும். சங்கீதக்காரன் எவனும் முழுமையான சங்கீதத்தை உணர்ந்தவனல்லன்.
சங்கீதம் சப்தத்துக்குள் அடங்கும். சப்தத்தின் மூலம் எது என்று உணர்ந்தவன்தான் சங்கீதக்காரன். தனக்கு சங்கீதம் தெரிந்துவிட்டது என்று நிச்சயமாக ஒருவன் அறிந்துவிட்டானேயானால், அவன் பாடவோ, இசைக்கவோ ஒருவனுக்குச்சொல்லிக்கொடுக்கவே மாட்டான். இசை தெரிந்தவன் ஏன் பாட வேண்டும்? தனக்குப் புகழ், பணம் தேட, அல்லது தனக்கு இவ்வளவு தெரியும் என்றுமற்றவர்களுக்குக்காட்டி அவர்களுடைய நன்மதிப்பு என்ற கர்வத்தை அடைய. சீச்சீ! இது சங்கீதக்காரனின் இலக்கணம் இல்லை பொன்னுக்கும், பொருளுக்கும். புகழுக்கும் ஆசைப்படுவது சங்கீதம் என்று நீங்கள் சொல்லலாம். உலகமே சொல்லலாம். ஊஹூம்....நான் சொல்ல மாட்டேன்.....
எச்சில் படாத இசை!
நான் விரும்பும் இசையானது எச்சில் படாத இசை, எவரும் தொடாத இசை, எவர் நினைவினாலும் கூடக்களங்கப்படாத இசை, மவுனமே நான் விரும்பும் இசை.
பாடல் உருவாவது எப்படி?
நான் எப்படி ஒரு பாடலை உருவாக்குகிறேன்? ஆற்று நீர் எப்படி ஊற்றெடுத்து ஓடுகிறதோ, அப்படி! ஏரி நீர் காற்றில் எப்படி சிலுசிலுக்கிறதோ, அப்படி! கடல் நீரில் அலைகள் எவ்வாறு ஆர்ப்பரிக்கின்றனவோ அப்படி! பறவைகள் சிறு சிறகை விரித்துப் பறப்பதெப்படியோ, அப்படி! இவையெல்லாம் உருவாக்கப்பட்டது எப்படியோ, அப்படியே பாடலும் உருவாகிறது. ஒரு வித்தியாசம் சர்க்கஸ்காரனின் முன்னால் பழக்கிவைக்கப்பட்ட விலங்கு எப்படி ஆணைக்குட்பட்டு வேலைகளைச்செய்கிறதோ, அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன். ஆட்டுவிக்கிறார்கள், ஆடுகிறேன். மக்களோ கைதட்டுகிறார்கள்.
இத்தகைய உயர்ந்த சிந்தனை கொண்ட
நம் இசைஞானி இளையராஜா அவர்கள்
வாழும் நாட்களில் நாமும் வாழ்வது தான்
நம் பாக்கியம் அல்லவா? .
இசையில் மட்டுமல்லாமல் தன் சொந்த வாழ்க்கையிலும் நற்பண்புகள் பல கொண்டு வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே வாழும் நம் இசைஞானி
என்றுமே ராஜா தான்.
நம் இசைஞானி இளையராஜா அவர்கள்
வாழும் நாட்களில் நாமும் வாழ்வது தான்
நம் பாக்கியம் அல்லவா? .
இசையில் மட்டுமல்லாமல் தன் சொந்த வாழ்க்கையிலும் நற்பண்புகள் பல கொண்டு வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே வாழும் நம் இசைஞானி
என்றுமே ராஜா தான்.
நன்றி. ..தினமலர். ..
கிறிஸ்டினா. ..
கிறிஸ்டினா. ..
No comments:
Post a Comment