Followers

Tuesday, August 1, 2017

வாழ்க்கை வாழ்வதற்கே

சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி கிடையாது.
வாகனம் ஓட்டுவது என்று முடிவு செய்தால் போக்குவரத்து நெரிசலை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
ஆரோக்யம் குறித்து அக்கறை கொண்டால் நாக்கு கேட்டதை எல்லாம் கொடுக்க முடியாது.
வாழ்க்கையில் நாம் எதை தேர்ந்தெடுத்தாலும் அதோடு ஒட்டிப் பிறந்த நன்மைகளோடும் தீமைகளோடும் தான் வரும்.
முட்களற்ற ரோஜாவைத் தேடுவது எவ்வளவு மடத்தனம்.
பிரச்னைகளற்ற ஆனந்தமான வாழ்க்கையை மகாத்மாக்களால் கூட வாழ முடியாது. அப்படிப் பட்ட வாழ்க்கை எதுவும் கிடையாது.
பெரிய சாதனை செய்ய வேண்டும் என்றால் பெரிய பிரச்னைகளை சந்திக்க தயாராக வேண்டும்.
செதுக்கப்பட நீங்கள் தயாராக இருந்தால் தான் துதிக்கப் படும் ஒரு சிலையாக நாம் மாற முடியும்.
சிகரத்தை அடைவதற்கு சுலபமான வழி ஏதும் கிடையாது. சிகரத்தை அடைந்தவர்கள் அதைச் சுலபமாக சென்றடையவில்லை.
என்ன இருந்தாலும் வரலாற்றை படிப்பவனுக்கும், வரலாற்றை படைப்பவனுக்கும் வித்தியாசம் இருக்கத் தானே வேண்டும்?
ஒவ்வொரு மனிதன் உள்ளம் ஒரு தீர்க்கதரிசி உறங்கிக் கொண்டிருக்கிறான். கடவுள் மனிதனாக மாறியதற்கு காரணம், மனிதன் மீண்டும் கடவுளாக ஆக வேண்டும் என்பதற்காகத் தான்.
துன்பம் அதிகம் வந்தால் மனம் தளராதீர்கள். கடவுள் உங்கள் மீது தனிக் கவனம் செலுத்துகிறார் என்று பொருள்.
வாழ்க்கை என்ற உலையில் போட்டு எரித்து, கர்ம வினைகளை நீக்கி, புடம் போட்ட சுத்தத் தங்கமாக உங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
Keep Going on,,
வாழ்க்கை வாழ்வதற்கே

நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments: