Followers

Wednesday, May 9, 2018

பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறதே? கொஞ்சம் பொறுமையாக படியுங்கள் !

பலர் எனக்கு இன்பாக்ஸில் message அனுப்பி, மோடி ஏன் பெட்ரோலையும் டீசலையும் GST யில் சேர்க்கவில்லை? பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறதே என்று கேள்வி கேட்க்கிறார்கள்

இதை சற்று விளக்கமாக எழுத விரும்புகிறேன்.. கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்
மன்மோகன் சிங் அரசு விட்டுச்சென்ற பொழுது (ஏப்ரல் 2014 ) நமது பெட்ரோல் விலை (சென்னையில்) கிட்டத்தட்ட ரூ 75.49 , இப்பொழுது சுமார் 76 ரூ.. ஏதோ பெரிதாக உயர்ந்துவிட்டதுபோல சித்தரிப்பது பொய்..ஆமாம், அப்பொழுது கச்சா எண்ணெய் விலை உலகளவில் குரைந்திருந்தது உண்மைதான், ஆனால் டாலர் விலை ஏறிக்கொண்டே போனது.. உடனே இங்கே சில அறிவு ஜீவிக்கள், ஏன் மோடி அரசு டாலர் விலையை குறைக்க முயற்சிக்கவில்லை என்று கேட்க்கிறார்கள்.. டாலர் விலை என்பது ஒரு நாடு நிர்ணயிக்கும் விலை இல்லை, கொடுக்கல் வாங்கலை பொறுத்து உலக செலாவணி சந்தையில் முடிவாகிறது..
அது ஒருபுறமிருக்க, மத்திய அரசும் excise வரியை உயர்த்தியது உண்மைதான்.. ஆனால் பெட்ரோல் விலையை பிரித்து பார்த்தல் இப்படி வருகிறது
ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் ரூ 27
அதை சுத்தப்படுத்தி, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் கொண்டு செல்லும் செலவு ரூ 3
இதற்க்கு மேல் டீலர் கமிஷன் ரூ 2
ஆகா மொத விலை ரூ 32
அதற்க்கு மேல் excise வரி 22 ரூ
32 + 22 = 55 ரூ
இதற்க்கு மேல் cess 2 ரூ = 57 ரூ
இதற்க்கு மேல் மாநில அரசின் VAT 34 % = 19 ரூபாய்
ஆகமொத்தம் 76 ரூ
ஆமாம்.. இது மிகவும் அதிகம்தான்... ஆனால் மத்திய அரசின் 22 ரூபாய் வரியில் 42 % மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும்.. ஆமாம்.. அதாவது கிட்டத்தட்ட Rs. 9.25..
ஆக மொத்தம் தமிழ்நாட்டு அரசுக்கு கிடைக்கும் வருமானம் 19 + 9.25 = 28.25 ரூ..
ஆக 12.75 காசுகள் மட்டும்தான் மத்திய அரசினுடையது
அவ்வளவு வருமானம் மாநில அரசிற்கு வருவதால்தான் மாநில அரசுகள் பெட்ரோலையும் டீசலையும் GST க்கு கீழ் வரவிட மறுக்கின்றன.. GST வரி என்பது மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்வதல்ல.. மாநில நிதி மந்திரிகளின் கூட்டமைப்பான GST Council முடிவெடுத்து அதை மத்திய நிதியமைச்சகத்திடம் அனுப்பினால்தான் மத்திய அரசு அதை நிறைவேற்ற முடியும்.. ஆனால் மாநில அரசுகள் இது GST கீழ் வந்தால் தங்களுக்கு பெரும் வருமான இழப்பீடு ஏற்படும் என்று அதை தடுக்கிறது.. இதை முதலில் எதிர்ப்பது தமிழ்நாடு அரசுதான், ஏனென்றால் தமிழ்நாடு அரசுக்கு பெட்ரோல் வரி மற்றும் சாராய வரி இல்லையென்றால் திவால்தான் என்கிற நிதி நிலைமை...மத்திய அரசு இதை செய்ய தயாராகத்தான் உள்ளது.. ஆகவே நீங்கள் கேள்விகேட்க வேண்டியது மாநில அரசைதான்.. மத்திய அரசை அல்ல.. புரிந்துகொள்ளுங்கள்

No comments: