Followers

Thursday, May 3, 2018

மோடி Vs ராகுல்

பெங்களூரில் உள்ள ஒரு சிறுமி எழுதிய கடிதம் பற்றி பார்க்கவும்.
நாட்டில் மக்கள் தொடர்ந்து வெறுக்கும்படி ஊடகங்களால் எழுதப்படுபவர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மட்டுமே.(lutyens media).
அவர்கள்.2002 ல் குஜராத்தில் முதல்வர் ஆனது முதல் காங்கிரஸ் அவரை தொடர்ந்து தாக்கி கொண்டிருக்கிறது. ஆனால் அவர் எல்லா தடைகளையும் தாண்டி நாட்டின் மிகப் பெரிய பொறுப்பில் இன்று இருக்கிறார்.
அவரின் புகழ் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று உலக அளவில் மாபெருந் தலைவராக திகழ்கிறார். இவர் RSS(BJP) அமைப்பில் சாதாரண ஊழியர் என்ற நிலையில் இருந்து அரசின் முக்கிய பொறுப்பாக ராஜதந்திரியாக உருவெடுத்துள்ளார்.
2012 க்கு முன் இவரை தில்லியில் உள்ளவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவரிடம் பேசுவதைக் கூட அவமானமாக நினைத்தவர்கள் இன்று அவரை சந்திக்க துடிக்கின்றனர்/ காட்துகிடக்கின்றனர்.
ராகுல்காந்தி தான் ஒரு பெரிய பிஸ்தா என்ற நினைப்பில் இவரை மதிக்காமல் இருந்ததும் இன்று தன் அரசியல் லாபத்திற்காக அவரை போல பின்பற்றி நாடகம் ஆடுகிறார்.
இந்த பெங்களூர் சிறுமி ராகுல்காந்தி அவர்களுக்கு எழுதியுள்ள இந்த கடிதம் சமூகவலை தளங்களில் மிகவும் பிரபலம்.
இதில் அவர் உங்களை எந்த விதத்தில் மோடியுடன் ஒப்பீடு செய்கிறீர்கள்.
அவர் கேட்கும் கேள்விகள் சில:
1. நரேந்திர மோடி அவர்களை தலைவராக கோடிக்கணக்காணோர் பின்பற்றுகின்றனர் . உங்களை எத்தனை பேர் பின்பற்றுகின்றனர்?
2. நமது நாடு குடும்ப ஆட்சி தேவை இல்லை என்று உங்களை துரத்தி விட்டு மோடி அவர்களை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நீங்கள் பொய்யான காந்தி என்ற அடைமொழியை தவிர என்ன சாதனை புரிந்திருக்கிரீர்கள்?
3. வருடாவருடம் மோடி அவர்கள் அவர் அம்மாவின் பிறந்த நாள் அன்று பகவத்கீதை போன்ற நல்வழி நூல்களை கொடுத்திருக்கிறார். நீங்கள் உங்கள் அம்மாவிற்கு என்ன கொடுத்தீர்கள்? ஊழல் செய்ய புது புது உத்திகளை தவிர?
4. மோடி அவர்கள் பாராளுமன்றத்திற்கு முதலில் சென்றபோது அதை கோயிலாக கருதி வணங்கி சென்றார். நீங்கள் அங்கு போயி தூங்குவதை தவிர என்ன உபயோகமான வேலை செய்தீர்கள்?
5. அவர் பிரதமர் ஆன பிறகு தன்னுடைய சம்பள பணம் 21 லட்சத்தை (சேமிப்பில் இருந்து) குழந்தைகள் படிப்பு மேம்பாட்டு நிதிக்காகக் கொடுத்தார். நீங்கள் இது மாதிரி நல்ல செயல் ஏதாவது தேசத்திற்காக செய்திருக்கிறீர்களா?.
6. அவரின் நான்காண்டு கால ஆட்சியில் 478 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். உங்கள் 10 ஆண்டு காலத்தில் என்ன செய்தீர்கள்?
7. உங்கள் 60 ஆண்டு கால ஆட்சியில் 30 சதவிகிதம் பேர் எரிவாயு இல்லாமல் கஷ்டப்பட்டனர். ஆனால் இந்த 4 வருடத்தில் 5 கோடி மக்களுக்கு எரிவாயு வழங்கப் பட்டுள்ளது. நீங்கள் ஏன் செய்யவில்லை?
8. மோடி அவர்கள் சொந்தங்கள் யாரும் அரசாங்கத்தால் பயன் பெறவில்லை.ஆனால் உங்கள் சொந்தங்கள் கட்சியை தன்சொத்தாகவும், ராபட்வாதரா போன்ற ஊழல்வாதிகளை வளர்த்தது உங்கள் அரசு.
9. டோக்லம் ஆக்ரமிப்பு விஷயம் உங்கள் ஆட்சியில் நடந்தது.ஆனால் இன்று மோடி அவர்களால் சீனா தனது படையை திரும்பப் பெற்றது. இதை ஏன் நீங்கள் செய்யவில்லை?
10. 4 வருடத்தில் மோடியின் ஆட்சியில் ஒரு ஊழல் கூட கிடையாது. ஆனால் உங்கள் ஆட்சியில் ஊழலைத் தவிர வேறொன்றும் இல்லை.
11. உங்கள் கட்சிக்காரர்கள் அவரை டீ வித்தவர் என்று சொல்வதை அவர் ஒத்துக் கொள்கிறார்.ஆனால் நீங்கள் என்ன வித்தீர்கள் என்று சொல்லமுடியுமா? நாட்டைதானே வித்தீர்கள்?
12. மோடி அவர்கள் வெளிநாட்டிற்கு செல்வது நமது நாட்டின் நன்மைக்காக. நீங்கள் எதற்காக செல்கிறீர்கள்?
13. மோடி அவர்கள் நாட்டைக்காக்கும் ராணுவ வீரர்களுக்கு பென்ஷன், (OROP)குண்டு துளைக்காதசட்டை மற்றும் ஹெல்மட் கொடுத்திருக்கிறார். நீங்கள் என்ன கொடுத்தீர்கள்?
14. அவரின் 4 ஆண்டு ஆட்சியில் 30 கோடி ஜன்தன் யோஜனா கணக்கு துவங்கப்பட்டுள்ளது. உங்கள் 10 வருடத்தில் ஏன் செய்யவில்லை?
15. பெண் குழந்தைகளை காப்பாற்ற BETIBACHAVO, BETIPADAO என்ற திட்டத்தை செயல் படுத்தினார். நீங்கள் ?
16. மோடி முத்ரா,ஆயுள்காப்பீடு போன்ற திட்டத்தை செயல் படுத்தி கோடிக்கணக்கான மக்கள் பயன் அடைய செய்தார். நீங்கள் 10 வருடத்தில் என்ன செய்தீர்கள்?
17. மோடி அவர்கள் தைரியமாக surgical strike செய்து பாகிஸ்தான்,பர்மா,பூட்டான் எல்லைகளை பாதுகாத்தார். நீங்கள்? அதனை தாரை வார்க்க தீவிரவாதத்தை ஆரம்பித்தீர்கள்.
18. மோடி அவர்களின் பாராட்டும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா கன்னடா, பூட்டான் ஸ்ரீலங்கா,ஆப்கனிஸ்தான்,நேபால்,மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அவர்களின் பாராளுமன்றத்தில் உரையாற்ற அழைத்தனர். உங்களை உங்கள் கட்சிக்காரர்களே கூப்பிட பயப்படுகின்றனர்.
19. நான்கு வருடத்தில் மோடி அவர்களை மிகவும் செல்வாக்குடைய நபராக உலக நாடுகள் அங்கீகரித்துள்ளது. ஆனால் 2004 முதல் அரசியலில் இருந்தும் உங்களை சீந்துவாரில்லை.
20. 22000 மக்களுக்கு முன்னாள் MADISON SQUARE GARDEN என்ற இடத்தில் இந்தியா பிச்சைக் காரநாடு அல்ல, நாங்களும் ஆளுமை உடையவர்கள் என்று கூறினார். உங்களுக்கு இதுமாதிரி பேச தைரியம் இருக்கா? பேசியதுண்டா?
21. மோடி அவர்கள் 18 மணி நேரம் உழைக்கிறார். இரவில் விமானத்தில் தூங்கி நேரத்தை மிச்சப் படுத்துகிறார். நீங்கள் நாட்டிற்காக என்ன கிழித்தீர்கள்?
22. மோடி அவர்களுக்கு அரசியல் பின்புலம் கிடையாது. அவர் தன்னுடைய கடின உழைப்பாலும், சீரிய திறமையாலும் நாட்டின் பிரதமரானார். ஆனால் நீங்கள் காந்தி என்ற போர்வையை விட்டு எதாவது சாதனை படைத்த பின்பு அரசியலுக்கு வரவும்.
23. அவர் 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி RSS மூலம் நாட்டிற்கு சேவை செய்தார். நீங்கள் 18 வயதில் என்ன செய்தீர்கள்
24. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் மோடி போல் சாதனை செய்ய விருப்ப படுகிறார்கள்.உங்களை போல வரவேண்டும் என்று ஒருவர் கூட நினைக்கவில்லை.
நாட்டிற்கு போலி காந்தியவாதி தேவை இல்லை. ஆனால் நாட்டை உயர்த்த நல்ல ஒரு தேசியவாதி மோடி மட்டுமே போதும்.
நீங்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு பாட்டி வீட்டுக்கு நிரந்தரமாக இத்தாலி செல்லலாம்.
என்றும் மோடியின் பாதையில் தேசபணியில்
Venkatesh Thiru narayanan.

No comments: