Followers

Wednesday, April 10, 2013

ஐந்தின் வகைகள்

தந்தை, தாய், அக்னி, ஆத்மா, குரு என்னும் இந்த ஐந்து அக்னிகளும், மனிதனால் பெரு முயற்சியுடன் பணிவிடை செய்து காப்பாற்றப்பட வேண்டும்.

தேவர்கள், பித்ருக்கள், சான்றோர்களான மனிதர்கள், துறவிகள்,. அதிதிகள் (விருந்தினர்) என்னும் இத ஐந்து வகைப்பட்டவர்களையும் வழி படுபவன் உலகத்தில் பெரும் புகழை அடைகிறான்.

எங்கு போனாலும் அங்கெல்லாம் நம்மைத் தொடரும் ஐவர்: நண்பர்கள்,விரோதிகள், நடு நிலை வகிப்பவர்கள், ஆதரிக்கப்பட வேண்டிய பெரியோர்கள், நம்மை அண்டிப்பிழைப்பவர்கள்

விதுர நீதி

No comments: