Followers

Sunday, October 20, 2013

இரட்டை அளவுகோல் வேண்டாம்


"மற்றவர்கள், உங்களுக்கு எதைச் செய்யக்கூடாது என நீங்கள் எண்ணுகிறீர்களோ, அதை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள். மற்றவர்கள் உங்களுக்கு எதைச் செய்யவேண்டும் என எண்ணுகிறீர்களோ அதை நீங்கள் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்"இதுவே தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடு. இரட்டை அளவுகோலைக் கொள்ளாதீர்கள். உங்களைப் போலவே அனைவரையும் நடத்துங்கள். உங்களிடமே உங்களுக்கு நம்பிக்கை பிறந்திடும் என்பதை இது கூறுகிறது. நீங்கள் தன்னையும் மற்றவர்களயும் மதிக்க வேண்டும். பிறர் நலன்பற்றிய அக்கறையின் அளவுகோல் செருக்குதான். மனிதகுலம் ஒரு சமுதாயம் ஆகும். நீங்கள் உங்களை வருத்திக்கொண்டு, அனைவரையும் வருத்துகிறீர்கள். நீங்கள் ஒருவரை நிமிர்ந்து நிற்கச் செய்தால் அச்செயல் உங்களை நிமிர்ந்து நிற்கவைத்துவிடும். மற்றவர்கள் உங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீகளோ, அதுவே நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையின் அளவுகோலாகிறது.

Bagavan Sri Sri Sri Sathya Sai Baba

No comments: