Followers

Thursday, May 29, 2014

மனசாட்சியே தெய்வம்


மனிதன் தன்னைக் கடவுளின் குழந்தையாக நினைத்துக் கொண்டால், வாழ்வில் தொல்லைகள் மறைவதுடன், நன்மையும் ஏற்படும்.
மனதில் இறைவனை நினைத்து அறிவு விளக்கேற்றி வைத்திருப்பவர்களின் மனதில் அற்பமான எண்ணங்கள் புகுவதில்லை.
குழந்தையிடம் குற்றம் காணாமல் குணத்தைக் காண்பவள் தாய். அந்தத் தாயின் உள்ளத்தை அறிபவன், கடவுளின் கருணையை அறிபவனாகிறான்.
நல்ல மனதுக்கு நல்லதாகவும், கெட்ட மனதுக்கு கெட்டதாகவும், தெய்வீக மனதுக்குத் தெய்வக் காட்சியாகவும் இந்த உலகம் தென்படுகிறது.
மனித உள்ளத்தில் தெய்வம் மனசாட்சியாய் உள்ளது. அதைச் சுட்டிக்காட்டவோ, உதாசீனப்படுத்தவோ நம்மால் முடியாது.
வாழ்வில் கடந்த பகுதி கனவாகப் போய் விட்டது. எஞ்சியிருக்கும் நாட்களும் கனவாகவே போய் விடும். இந்த உண்மையை உணர்ந்து, இறைவனிடம் உலக வாழ்வு நிலையானது என்று நினைக்கும் அறியாமையை அகற்ற பிரார்த்திப்போம்.


No comments: