Followers

Friday, October 9, 2015

புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் முரண்பாடுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் அந்த முரண்பாடுகளை அனுபவித்துப் பார்க்க வேண்டும். நீங்கள் அந்த முரண்பாடுகளைப் புரிந்து கொள்ளும்பொழுது , நீங்கள் அந்த முரண்பாடுகளின் கிடுக்கிப் பிடியிலிருந்து விடுபடுகிறீர்கள் . உண்மையில் சொல்லப்போனால் பிரபஞ்சத்தின் படைப்பில் எந்த முரண்பாடுகளும் இல்லை. பிரபஞ்சம் என்பதை இதுதான் அல்லது அதுதான் என்று வரையறுத்து சொல்லிவிட முடியாது. உண்மையில் இதுவும், அதுவும் சேர்ந்தது தான் பிரபஞ்சம். எப்போதும் எதையோ தேடிக்கொண்டு இதுவா அதுவா என்று யோசித்துப் பார்த்து முடிவு செய்யும் நம்முடைய மனதிற்கு மட்டுமே இந்த முரண்பாடுகள் எல்லாம் தெரிகின்றன. நீங்கள் நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே தேர்ந் தெடுத்தீர்கள் என்றால் அது பிரச்னை தான். பிரபஞ்ச விதி பூவா இல்லை தலையா என்பது இல்லை.. பூவும் தலையும் இரண்டுமே சேர்ந்தது தான் நாணயத்தின் அமைப்பு. அதுவே பிரபஞ்சத்தின் அமைப்பும் கூட . எனவே அடுத்தமுறை உங்களுக்கு வேண்டியதை கேட்கும் பொழுது பூ வேண்டும் அல்லது தலை வேண்டும் என்று கேட்காதீர்கள் நாணயம் வேண்டும் என்று கேளுங்கள். நாணயம் என்ற பிரபஞ்சத்தில் அருள்செல்வமும் பொருட்செல்வமும் அந்த நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். -- வாழ்க்கை முரண்பாடுகள் - இன்பினி மலர் 2 இதழ் 17 செப் 1 - 15

No comments: