பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒரு நாத்திகன் வந்தார்.
'' சுவாமி ! ஒரு சந்தேகம் !" என்றார்.
" என்ன?" என்று கேட்டார் பரமஹம்சர்
" நீங்கள் விஷ்ணு என்கிறீர்கள், சிவன் என்கிறீர்கள். அதே விஷ்ணுவின் அவதாரம்தான் ராமனும் கிருஷ்ணனும் என்கிறீர்கள். ஒரே விஷ்ணுவுக்கு இத்தனை வடிவங்கள் எதற்க்கு? ஏன் ஒரே கடவுளாக வைத்துக் கொண்டால் என்ன?" என்று கேட்டார்.
அதற்க்கு பரமஹம்சர் உடனே,
"ஐயா ! ஒரு விஷயம். நீங்கள் ஒருவர்தான்.
ஆனால் உங்கள் அப்பாவுக்கு மகன், உங்கள் மகனுக்கு நீங்கள் அப்பா, மனைவிக்கு கணவன், மாமனாருக்கு மாப்பிள்ளை. மாப்பிள்ளைக்கு மாமனார், மைத்துனனுக்கு மைத்துனன், பாட்டனுக்குப் பேரன், பேரனுக்கு பாட்டன்.
இவ்வாறு உங்கள் ஒருவருக்கே இத்தனை வடிவங்கள் இருக்கும்போது, ஈஸ்வரனுக்கு இருக்க கூடாதா?" என்றார்.
கேள்வி கேட்டவர் முகத்தில் அசடு வழிந்தது.
பல தெய்வ வணக்கம் நியாயம் என்பதற்க்கு இதற்க்கு மேல் ஒரு உதாரணம் தேவையா?
No comments:
Post a Comment