Followers

Tuesday, February 27, 2018

ஆட்டோ ஓட்டுநர்கள் நமது சகோதரர்கள்

ஷேர் ஆட்டோ ஓட்டும் தோழர்களே
ஷேர் ஆட்டோவில் பயணிக்கும்
பொது மக்களே நண்பர்களே
சகோதர சகோதரிகளே
போக்குவரத்து
காவல் துறையைச்
சார்ந்த அதிகாரிகளே அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.
இதைப்பற்றி எத்தனையோ பேர் பதிவிட்டிருக்கலாம். அதில் நானும் ஒருவனாகிறேன். என் கருத்துக்கள் ஏற்புடையதாய் இருந்தால் பரிசீலியுங்கள்.
ஆட்டோ நிறுத்தம் இதுதானென முடிவு செய்யுங்கள்.
மக்கள் கை காட்டும் இடங்களில் எல்லாம் நிறுத்தி பொது மக்களை சோம்பேறிகள் ஆக்காதீர்கள். முடிவு செய்யப்பட்ட நிறுத்தங்களில் ஆட்டோக்களை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்துங்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆட்கள் ஏறிய பின் அடுத்த ஆட்டோ என்ற நிலை வந்துவிட்டால் எல்லா ஆட்டோக்களுக்கும் சவாரி நிச்சயம் உண்டு. ஒன்றை ஒன்று முந்த தேவையில்லை. விபத்துக்களும் வெகுவாய் குறையும். போக்குவரத்தும் சீராகும்.
பொது மக்களாகிய நாமும் ஷேர் ஆட்டோ நிறுத்தத்திலே தான் ஏறுவது என தீர்மானிப்பதுடன் நாம் நிற்கும் இடத்திலே ஆட்டோவை நிறுத்த கோருவதில்லை என முடிவெடுத்து அதன்படி நடந்து கொண்டால் மிக்க நலமாய் இருக்கும்.
காவல் துறையைச் சார்ந்தவர்கள் நமது நண்பர்கள்.
ஆட்டோ ஓட்டுநர்கள் நமது சகோதரர்கள்

No comments: