Followers

Tuesday, February 18, 2020

சிறுகுறிப்பு


பெண்கள் தினமும் சாதம் செய்யும்போது ஏதாவது ஒரு அளவில் அரிசி எடுப்போம் அல்லவா. ஒரே ஒரு அளவு தான் எடுப்போம் என்றால் அதே அளவை மூன்று சிறிய அளவில எடுத்து முதல் தடவை எடுக்கும் போது இது பெருமாளுக்கு என்றும் இரண்டாம் அளவு எடுக்கும் போது இது தாயாருக்கு என்றும் மூன்றாவது தடவை எடுக்கும் போது இது ஆசார்யனுக்கு அல்லது குருவுக்கு என்று சொல்லி எடுத்து சமைத்து வர அரிசி எடுத்த பாத்திரத்தில் அரிசி என்றும் குறையாதாம். அவர்கள் மூவரும் குறையாத அளவுக்கு அனுக்ரஹம் செய்வார்கள்களாம்.
அரிசியை உலையில் ஏற்றும் போது( அன்னம் அலைமோத...அரிசி அமுதாக...சூரிய பாண்டம்...திரெளபதி சமையல்...தர்மபுத்திரர் யக்ஞம்...பஞ்சபாண்டவர்கள் போஜனம் க்ருஷ்ணா அக்ஷயம்..க்ருஷ்ணா அக்ஷயம்..க்ருஷ்ணா அக்ஷயம்) என்று சொல்லி உலை அல்லது குக்கர் வைக்க அன்னத்துக்கு தட்டுப்பாடு வராதாம்.
நாம் பெருமாளுக்கு... தாயாருக்கு... ஆச்சார்யனுக்கு/குருவுக்கு என்று சொல்லி உலையிடும் அரிசியை வருணதேவனும்...அக்னியும் வாயு பகவானின் துணை கொண்டு பல மடங்காக ஆக்கி.. சாதமாக நாம் சாப்பிடும் பக்குவத்தில் ஆக்கி தருகிறார்கள்.
அதைப் போலவே நாம் செய்யும் ஒரு நல்ல காரியம் பல மடங்காக பெருகி நமக்கே திரும்ப கிடைக்கிறது.


No comments: