Followers

Sunday, March 22, 2020

அவர் என் நாட்டின் பிரதமர், இனியும் பொருக்க முடியாது கைது செய்யுங்கள் அதிரடி உத்தரவிட்ட தெலுங்கானா முதல்வர் அதிர்ச்சியில் திமுகவினர்..


உலகம் முழுவதும் 3 வாரத்தில் கொரனோ தாக்கம் அதிகமாக இருப்பதாக வல்லுநர்கள் அறவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர், மேலும் சமீபத்திய எடுத்துக்காட்டாக இத்தாலியில் கொரோனா மூன்றாவது வாரத்தில் பரவியது மட்டுமல்லாமல் உலகிலேயே அதிக மக்களை இத்தாலி கொரானாவிற்கு பலி கொடுத்தது.
இந்நிலையில் இந்தியா போன்ற 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் கொரோனா முன்றாவது நிலைக்கு சென்றால் 30 கோடி மக்கள் வரை பாதிப்படையலாம் என கூறப்படுகிறது, இதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி இன்று சுய ஊரடங்கு முறையை கடைபிடிக்க அறிவுறுத்தினார், அத்துடன் மாலை 5 மணிக்கு நமக்காக உழைக்கும் மக்களுக்கு கை தட்டுங்கள் என்று கோரிக்கை விடுத்தார்...
இந்நிலையில் பிரதமர் மோடியின் சில அறிவிப்புகளை, ஆபத்தின் எல்லை அறியாமல் சிலர் கிண்டல் செய்து சமூக ஊடகங்களில் பதிவு செய்து வந்தனர், இதனால் எரிச்சல் அடைந்த தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கடுமையாக திட்டி தீர்த்துள்ளதுடன் அவர்களை கைது செய்யவும் DGP க்கு உத்தரவிட்டுள்ளார்.
எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு.மோடி இந்தியாவின் பிரதமர் நாம் அவரை மதிக்க வேண்டியது கட்டாயம் மோடிக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் அருவருப்பாகவும்,இவர்களது வக்கிரபுத்தியை காட்டும் விதமாகவும் உள்ளது.
பிரதமர் என்கிற குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாமல் கேலி செய்யப்படுகிறது எல்லாம் மாலை 5 மணிக்கு வீட்டிலிருந்தோ,வெளியில் வந்தோ கைதட்டுமாறு பிரதமர் நம்மிடம் கேட்பதில் என்ன தவறு உள்ளது?
இது கொரோனா போய்விடும் என்பதால் அல்ல நமது நாட்டின் ஒற்றுமையைக் காண்பிப்பதற்கும்,கொரோனாவுக்கு எதிராகப் போராடும் நமது மன உறுதியை காட்டுவதற்கும் செய்வது
நானும் ஞாயிற்றுக்கிழமை பிரஹதி பவனில் எனது குடும்ப உறுப்பினர்களுடன் மாலை 5 மணிக்கு பால்கனியில் நின்று கைதட்டி மருத்துவர்களுக்கும்,இதற்காக பாடுபடும் அதிகாரிகளுக்கும் நன்றி சொல்வோம்.
பிரதமர் மோடியை வரம்பை மீறி ட்ரோல் செய்யும் குற்றவாளிகளை பிடித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க டிஜிபியிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்..

தெலங்கானா முதல்வர் சந்திர சேகரராவ்.
தெலுங்கானா முதல்வரின் இத்தகைய செயல்பாடு இந்தியா முழுவதும் மோடியை எதிர்த்து கொரோனா விஷயத்திலும் அரசியல் செய்யும் கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து திமுகவை சேர்ந்த எம் பி கள் அவரது ஆதரவாளர்கள் கொரோனா குறித்து பிரதமரின் பேச்சினை கிண்டல் செய்து வரும் நிலையில் தெலுங்கானா முதல்வரின் பேச்சு அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

No comments: