தோட்டத்தில் மண்டிக் கிடக்கும் செடி, கொடிகளை வெட்டி சீர்படுத்தி
அழகுபடுத்துவது போல, மனதையும் தியானப் பயிற்சியால் சீர்படுத்த வேண்டும்.
கோபம் பல தீய விஷயங்களை மனதில் தூண்டிவிடும். பல ஆண்டுகளாக கிடைத்த ஆற்றலை கணநேரத்தில் இழக்கச்செய்து விடும்.
மன பலவீனமே கோபமாக வெளிப்படுகிறது. அமைதி, பொறுமை, பணிவு போன்ற நற்குணங்களை மனதில் நிரப்பி விட்டால் பலவீனம் காணாமல் போய்விடும்.
இறைவனை அறிய வேதம் பயிலத் தேவையில்லை. எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டினாலே, இறையருள் என்னும் பரிசு பெறலாம்.
அடுத்தவரிடம் அன்பு காட்டாவிட்டால் உன்னையே நீ நேசிக்க முடியாது.
அடுத்தவரைத் துன்புறுத்தும் மனிதன் தனக்குத் தானே துன்பம் இழைத்துக்
கொள்கிறான்.
பிறர் வற்புறுத்தலுக்காக இல்லாமல் மனதிலிருந்து தொண்டாற்றும் சிந்தனை தானாக வர வேண்டும்.
Bagavan Sri Sri Sri Sathya Sai Baba
Bagavan Sri Sri Sri Sathya Sai Baba
No comments:
Post a Comment