என் அருமை நண்பர் Sivakumar Venkatachalam அவர்களின் பதிவு.....
நண்பர் ஒருவருக்கு பாடல்கள் சிலவற்றை பரிந்துரை செய்யவேண்டி இருந்தவேளையில் இளையராஜாவின் how to name itல் வரும் வயலின் இசையை மீண்டும் கேட்க நேர்ந்தது. பாலுமகேந்திராவின் வீடு திரைப்படத்திலும் இந்த இசைக்கோர்வைகள் பயன்படுத்தப் பட்டிருக்கும்.
உலகில் எத்தனையோ இசைமேதைகள் இருக்கலாம். அதில் பலர் வயலினை பலவிதங்களில் நேர்த்தியாகக் கையாண்டிருக்கக்கூடும். நானுமே ராஜாவைத்தாண்டி பலரின் வயலின் வித்தைகளைக் கேட்டு ரசித்ததுண்டு. ஆனால் அவை நேர்த்தியான இசை மட்டுமே. ஆனால் இளையராஜா அந்த இசையிலும் கொஞ்சம் ஜீவனையும் புகுத்தியிருக்கிறார். காதுகள் வழியே புறப்படும் அது உயிர்க்கூட்டில் நுழைந்து இனம்புரியாத பரவசத்தை ஏற்படுத்திவிட்டு உடலில் எங்கேயோ ஒரு மூலையில் தங்கியும் விடுகிறது.
பலர் மேல் காதல் வருவதுண்டு போவதுண்டு. ஆனால் எப்படி முதல் காதலை மட்டும் மறக்கமுடியாமல் மனதில் பூட்டி பொக்கிஷமாக பாதுகாக்கிறோமோ அதைப்போலவே எனக்கு முதன் முதலில் பரிட்சயமான இசை இளையராஜாவினுடையது. யுகங்கள் கடந்தாலும் அதன்மீதுள்ள காதல் மட்டும் மாறுவதில்லை. அந்தவகையில் என்னைப் பொருத்தவரையில் ராஜாவின் இசைக்கு ஈடு இணை இந்த உலகத்தில் இல்லை.
ராஜாடா!
No comments:
Post a Comment