தவறு செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவேண்டியவர்களே .. இதற்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் விதிவிலக்கல்ல. சங்கர்ராமன் கொலையாளியை கண்டுபிடி என்று சொல்லியிருந்தால் அனேகமாக போலிஸ் குற்றவாளியை பிடித்திருக்கலாம். எப்படியாவது கொலையாளி ஜெயேந்திரர் என்று link செய்யுங்கள் என்பது போலிஸுக்கு உத்தரவு போலும் . அவரை சிறையில் அடைத்து அசிங்கப்படுத்தினார்கள்,. கோர்ட் அவருக்கு bail கொடுத்தவுடன் சம்மந்தமில்லாமல் விஜயேந்திரர் கைது செய்யப்பட்டார். அவருக்கு bail கிடைத்தவுடன் திடீரென்று சங்கர மடத்தில் மேலாளராக இருந்த RBI ல் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சுந்தரேசன் என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார் . சிறையில் போதை மருந்து கொடுத்து ஜெயேந்திரரை உளரவைத்து அதன் CD அனைத்து TV சேனல்களுக்கும் கொடுக்கப்பட்டது . பத்திரிகைகளில் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகளுக்கு தினமும் கஞ்சா வேண்டும் , தினமும் இரவு நடிகைகள் வேண்டும் , விஸ்கி வேண்டும் என்று எழுதப்பட்டது. காஞ்சிபுரம் பகுதியில் நடந்த அனைத்து கொலைகளும் சங்கர மடத்தோடு தொடர்பு படுத்தப்பட்டது.
இதை முன்னின்று செய்தவர்கள் கீழிருந்து SP பிரேம்குமார் , ஜெயலலிதா , சசிகலா மற்றும் நடராசன். முதலில் பிரேம்குமார் இரண்டு கிட்னியும் பழுதடைந்து கால்கள் எடுக்கப்பட்டு 6 மாதம் கோமாவில் இருந்து மாண்டார். தமிழகத்தின் முடிசூடிய ராணியாக இருந்த ஜெயலலிதா தனக்கு என்ன வியாதி , என்ன நடந்தது என்றே தெரியாமல் அனைவர் கண் பார்வையிலிருந்தும் மறைக்கப்பட்டு அனாதையாக மாண்டார் . சசிகலா .. கேட்க வேண்டாம் .. நடராஜன் 2 கிட்னி, லிவர் செயலிழந்து இறுதி கட்டத்தில் உள்ளார் என மருத்துவமனை சொல்லியுள்ளது.
சந்யாசியாக இருந்தாலும் சில வருட துன்பத்தை அனுபவித்து ஜெயேந்திரர் தன் கர்மாவை கழித்துவிட்டார்.
ஆனால் அவரை கொடுமை செய்து, பலரால் புனிதமாக கருதப்படும் பாரம்பரியமிக்க மடத்தை நிலைகுலையச் செய்தவர்கள் எமனுடன் போராடியே தங்கள் விக்கெட்டை இழக்கின்றனர் .
No comments:
Post a Comment