Followers

Saturday, September 30, 2017

சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு.

சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடு. அங்கு ஜாதி மற்றும் மத பாகுபாடு கிடையாது. ஆனால் அரசு அனுமதி பெற்றபின் மட்டுமே தனது மத நம்பிக்கையை, மத உணர்வுகளை வெளிகாட்டி கொள்ளலாம்.
முதலில் முகம்மதியர்கள் தங்களது மத வழக்கப்படி தாடி வளர்க்க கூடாது என்று தடை. உலகில் உள்ள 58 இஸ்லாமிய நாடுகளும் அமைதி காத்தன. அதை விட அதிசயம் என்னவென்றால் நமது நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாரும் வாயை திறக்கவில்லை.
இப்போது அதே சீனா அங்கு வசிக்கும் முகம்மதியர்கள் யாரும் மத அடையாளங்களில் ஒன்றான குரானை வீட்டில் வைத்து கொள்ள கூடாது என்று அறிவித்து உள்ளது. இதுவரை இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது உண்மையிலேயே ஆஸ்ச்சர்யத்தை தூண்டுகிறது.
இதையே இந்தியா செய்திருந்தால் இங்கு உள்ளவர்கள் மதம், இனம், மொழி, பேதம் பார்க்காமல் பொங்கி எழுந்து பொங்கல் வைத்து கண்டனம் தெரிவித்து முடிக்கும்போது பார்ப்பணீய ஆதிக்கம், மதவெறி பிடித்த, ஃபாஸிச மோதி அரசே ஒழிக என்று ஓலம் இட்டு இருப்பார்கள்.
நமது இஸ்லாமிய நண்பர்கள் ஏற்றுக்கொண்டாலும், நமது நடுநிலை திராவிட இயக்கங்களின் நோன்பு கஞ்சி மற்றும் பிரியாணி பிரியர்கள் சும்மா விடுவார்களா??????
சீனாவின் இந்த செயல் நிச்சயம் கண்டனத்துக்கு உரியது என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. ஆனால் நேர்மை மற்றும் நியாயமான முறையில் செயல்படும் இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல் அமைந்தது வருத்தம் அளிக்கிறது.

No comments: