துணிச்சலாய் நடவடிக்கை எடுத்த பிதாமகனே.....வாழ்த்துக்கள் பிரதமரே...
ஆடுவோமே......பள்ளுப் பாடுவோமே...
ஆனந்த (பொருளாதார) சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று....
ஒருமுறை, இருமுறை, பலமுறை சொல்லியும் புரியவில்லையென்றால், அது வடிகட்டிய முட்டாள்தனம்.
ஒருமுறை, இருமுறை, பலமுறை சொல்லியும் புரியாதது போல நடித்தால், அது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
.
நவம்பர் 04, 2017 நிகழ்ச்சியில், பாரதம் சமீபத்தில், பெற்ற பல்வேறு ரேங்குகளை குறிப்பிட்டு, மோடிஜி குறிப்பாலுணர்த்திய செய்தி, இதுதானோ?
.
.
1. Global Competitiveness Index By WEF
உலக போட்டியிடும் திறம் குறியீடு -- 3 ஆண்டுகளில், 31 ரேங்க் உயர்வு. (உலக பொருளாதார மையம் ) (71லிருந்து 40)
.
2. Global Innovation Index By WIPO
உலக புத்தாக்க திறம் குறியீடு – இரண்டு ஆண்டுகளில், 21 ரேங்க் உயர்வு (உலக அறிவுசார் உடைமை அமைப்பு) ( 81லிருந்து 60)
.
3. Logistics performance index By World Bank
உலக லாஜிஸ்டிக் செயல்பாடு குறியீடு – இரண்டு ஆண்டுகளில், 21 ரேங்க் உயர்வு (உலக வங்கி) (54லிருந்து 35)
.
4. Ease of doing business Rank By World Bank
சுலபமாக வர்த்தகம் செய்யும் திறம் தரவரிசை – மூன்று ஆண்டுகளில், 42 ரேங்க் உயர்வு (உலக வங்கி) (142லிருந்து 100)
.
.
டீமனிட்டைசேஷனின் போது, ---
“ இப்படியெல்லம் டீமானிட்டைசேஷன் செய்ய, ஹார்வர்டில் சொல்லிக்கொடுக்கவில்லை, ஆக்ஸ்ஃபோடில் சொல்லிக் கொடுக்கவில்லை. மோடி தன்னிச்சையாக, முட்டாள்தனம் செய்து விட்டார்”, ----
என்றவர்கள், வெள்ளைத்தோலன் கருத்தியல் ஓங்கி நிற்கும் உலக அமைப்புக்கள், இந்திய பொருளாதாரத்துக்கு நற்சான்றிதழ் தரும்போது, “ வெள்ளைத் தோலன் கருத்தியல் அமைப்புக்கள் தவறு செய்து விட்டன; அவர்கள் விலை போய் விட்டார்கள்”, என்று சொல்கிறார்கள்.
.
.
பூனைகள், பட்டப்பகலில், ஒளிமிகுந்திருக்கையில், கண்ணை மூடிக் கொண்டு, "உலகம் இருண்டுவிட்டது", என்று சொன்னால், உலகம் இருண்டதாகிவிடது.
பூனைகளின் கண் அமைப்பு அப்படி, வெளிச்சத்தை தாங்காது.
.
.
அதுபோல, சிலருக்கு ஊழல் நிறைந்த கருப்பு பொருளாதாரம் மட்டுமே சிறப்பான பொருளாதாரமாக தெரியும்.
.
வெளிப்படையான செயல்பாட்டுடன், அனைவரையும் அரவணைத்து உயரும் பொருளாதாரத்தை பார்க்கவோ, உணரவோ, சிலருக்கு திறமில்லை.
.
உணரவே முடியாமல், ஊழலில் திளைத்து, மனம் மரத்துப் போனவர்கள், நல்லதை பாராட்ட முடியாமல், வசை பாடுவதை புரிந்து கொள்ள முடிகிறது.
.
“நீண்ட காலத்தில் நாமெல்லோரும் செத்திருப்போம்” என்று பயந்து, அவசரம் அவசரமாக, ஊழல் செய்தோரை நம்பி, மென்மேலும் ஏமாறும் அப்பாவிகளை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.
.
.
எது எப்படியாயினும், மோடிஜி அரசு, " நீகாநாசெ ஊழல்வாதிகளிடம், இன்றளவும் ஏமாந்து நிற்கும் அப்பாவி"களின் உயர்வுக்கும் சேர்த்தேதான் உழைக்கிறது.
சப் கா சாத் சப் கா விகாஸ்.