Followers

Monday, December 4, 2017

மோடியும் (மன்)மோஹனும்!

இந்நாள் பிரதமர் நரேந்திர மோடியும், முன்னாள்
பிரதமர் மன்மோஹன் சிங்கும் மிக எளிய
குடும்ப பின்னணியில் பிறந்தவர்கள் , வளர்ந்தவர்கள்.பிரதமர் பதவி என்ற உச்சத்தை
தொட்டவர்கள்.
மோடி தனது எளிய குடும்ப பின்னணியை கூறி
மக்களின் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கிறார்
இந்த விஷயத்தில் அவரோடு நான் போட்டியிட
விரும்பவில்லை என்று மன்மோஹன் சிங் கூறி
இருக்கிறார்.
மோடி தனது இளவயதில் டீ விற்றதை வைத்து
காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்ததால்'ஆமாம்
நான் டீ விற்றேன் ஆனால் நாட்டை விற்க வில்லை'
என்று மோடி பதிலடி கொடுத்தார்.
காங்கிரஸ் கட்சி நாட்டை விற்கிற கட்சி என்ற
மோடியின் எதிர் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி
நேரடியாக பதிலளிக்க வில்லை!
மாறாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போல
மோடி விரிவான பார்வை கொண்டவர் அல்ல
என்று காட்ட முயற்சி செய்கிறது.
மோடி ,மன்மோஹன் இருவருமே பிரதமர் பதவியை அடைந்தவர்கள் தான் ஆனால் அதை
அடைந்த விதம் நேர்மாறானவை.
மத்திய நிதி அமைச்சராக, இந்திய பிரதமராக
மன்மோஹன் சிங் அமர்ந்தது இந்திய அரசியலில்
நிகழ்ந்த விபத்துக்களால்.
மோடி முதல்வர் பதவியையும் பிரதமர் பதவியையும் அடைந்தது அரசியல் உழைப்பால்.
பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக மன்மோஹன் ஆனதே இல்லை.அதாவது மக்களை
சந்தித்த தலைவரே அல்ல!
தனது ஆட்சிக் காலத்தில் ஊழல் பெருவெள்ளம்
நாட்டைத் தாக்கிய போது அவர் கூச்சப்படாமல்
பதவியில் நீடித்தார்.
கொள்கை முடக்கு வாத அரசு என்ற குற்றச்சாட்டு
எழுந்து போது அவர் வெட்கப் பட்டு பதவி விலக
வில்லை!
மோடி டீ விற்பனை செய்த பின்னணியை கூறி
ஏளனம் செய்யப் பட்டது போல மன்மோஹன் சிங்கை அவரது எளிய குடும்ப பின்னணியை கூறி
யாரும் கிண்டல் செய்தது இல்லை!
இந்த நிலையில் இன்னாள் பிரதமரின் மற்றும்
முன்னாள் பிரதமரின் உளவியல் உயர்வு தாழ்வுகளை ஒப்பிட்டு தரம் பிரிக்க நடக்கும் முயற்சி மேலும் ஒரு கேவலம்!
மன்மோஹன் சிங் கற்றறிந்த மேதை!
மோடி கொடுத்த பதிலடிக்கு பதில் தருவதற்கு முன்
காங்கிரஸ் கட்சி செய்த விமர்சனத்தில் தனக்கு
உடன்பாடில்லை என்று கூறி இருந்தால்
மன்மோஹன் சிங் மீது மரியாதை உண்டாகி
இருக்கும்!
தனக்கு தனது மரியாதை குறித்த அக்கறை எப்போதும் இருந்தது இல்லை என்று இப்போதும்
நிரூபித்து இருக்கிறார் மன்மோஹன் சிங்!
அவரைப் பற்றி நமக்கு இருக்கும் கவலை கூட அவருக்கு இல்லை என்பது தான் ஆச்சரியம்!!!
வசந்தன் பெருமாள். துக்ளக் இணை ஆசிரியர்

No comments: