2016 தமிழக சட்டமன்றத்தேர்தலின்போது முதல்வர் வேட்பாளர்களாக முன்நிறுத்தப்பட்டவர்கள் மூவர்... ஜெயலலிதா , கருணாநிதி , விஜயகாந்த்...
ஜெயலலிதா காலமாகிவிட்டார்...கருணாநிதிக்கு உயிர் மட்டும்தான் இருக்கிறது...விஜயகாந்த் பேசமுடியாமல் , நடமாடுவது கூட சிரமத்தில் இருக்கிறார்...
இது எதுவுமேதேர்தலின் போது மக்களுக்கு தெரியாதா? ஜெயலலிதாவால் பிரச்சாரம் கூட செய்யமுடியவில்லை.... கருணாநிதியும் அதே கதிதான்...விஜயகாந்த்தின் உளறல்கள் உலகப்பிரசித்தம்...ஆனால் , இவர்களின் உடல்நலம் குறித்த தகவல்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டன.... மீறி யாராவது பேசமுயன்றால் தனிநபர் தாக்குதல் என்று ஓலமிட ஒரு கூட்டமே கிளம்பிவந்திருக்கும்....இதன் விளைவு என்னவென்றால் , நாம் யாரையோ மனதில் வைத்து ஓட்டுப்போட , இப்போது யார்யாரோ நம்மை ஆள்கிறார்கள்... விபத்து [ ஒய்.எஸ்.ஆர்.ரெட்டி..]அல்லது சதிச்செயல் [இந்திராகாந்தி ] என்றால் பரவாயில்லை....ஆனால் தீராநோயாளிகள் நம்மை ஆள அனுமதிப்பது என்ன மாதிரியான மடமை?
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் அனைவருமே தீவிரமான வியாதியஸ்தர்கள்தான்,..
இதோ , இப்போது கூட ஸ்டாலின் ஆறு மாதத்துக்கு ஒருமுறை லண்டன் செல்கிறார்...அவருக்கு லூகேமியா என்றும் , ஒவ்வொருமுறையும் முழுமையாக ரத்தம் மாற்றுவதற்கே அவர் [blood transfushion ] அங்கு செல்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன...அழகிரி கருணாநிதியிடம் , " ஸ்டாலினா ? அவனுக்கு இருக்குற வியாதிக்கு அவன் ஆறு மாசத்துல செத்துடுவான் " என்று தன்னிடம் கூறியதாக கருணாநிதியே ஒரு பேட்டியில் தெரிவித்தார்...அதையொட்டித்தான் அழகிரி கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்...
இன்றுவரை ஸ்டாலின் உடல்நலம் பற்றி திமுக தரப்பில் வாயே திறப்பதில்லை...
இதோ , இப்போது கூட ஸ்டாலின் ஆறு மாதத்துக்கு ஒருமுறை லண்டன் செல்கிறார்...அவருக்கு லூகேமியா என்றும் , ஒவ்வொருமுறையும் முழுமையாக ரத்தம் மாற்றுவதற்கே அவர் [blood transfushion ] அங்கு செல்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன...அழகிரி கருணாநிதியிடம் , " ஸ்டாலினா ? அவனுக்கு இருக்குற வியாதிக்கு அவன் ஆறு மாசத்துல செத்துடுவான் " என்று தன்னிடம் கூறியதாக கருணாநிதியே ஒரு பேட்டியில் தெரிவித்தார்...அதையொட்டித்தான் அழகிரி கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார்...
இன்றுவரை ஸ்டாலின் உடல்நலம் பற்றி திமுக தரப்பில் வாயே திறப்பதில்லை...
ஒருவேளை வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற்று முதல்வரானபின் [ ஒரு பேச்சுக்குத்தான்...நெருப்பென்றால் வாய் வெந்துவிடாது,..] அவர்போய்ச்சேர்ந்துவிட்டாலோ , அல்லது நோயின் தீவிரம் அதிகமாகி படுக்கையில் வீழ்ந்தாலோ , இங்கு என்ன நடக்கும்..? இன்று அதிமுகவில் என்ன நடக்கிறதோ , அது அத்தனையும் திமுகவில் நடக்கும்...மாநில நிர்வாகம் என்னாவது?
சோனியா காந்தி அவ்வப்போது மருத்துவசிகிச்சை என்று சொல்லிக்கொண்டு வெளிநாடு கிளம்பிவிடுகிறார்...அவருக்கு என்ன பிரச்சினை என்று எவரும் மூச்சுக்கூட விடுவதில்லை...
பாஜகவில் மட்டுமே தலைவர்கள் உடல்நிலை பற்றிய விபரங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகின்றன்...வாஜ்பாய்க்கு மும்பை பிரீச்கேண்டி மருத்துவமணையில் நடந்த மூட்டுமாற்று அறுவைச்சிகிச்சையாக இருந்தாலும் சரி, அருண்ஜேட்லி , சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீரகமாற்று அறுவைச்சிகிச்சைகள் பற்றியும் சரி...முழு விபரங்களும் வெளியிடப்பட்டன...மேலும் மனோகர் பாரிக்கர் தவிர ஏனைய தலைவர்கள் அனைவரும் இந்திய மருத்துவமணைகளிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டனர்...
தங்களை ஆளும் தலைவரகளின் உடல்நலம்பற்றிய தகவ்ல்களை தெரிந்துகொள்வது வாக்களித்த மக்களின் உரிமை...மேலைநாடுகளில் இது கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படிகிறது...சமீபத்தில்கூடஅமெரிக்க அதிபர் ட்ரம்பின் உடல்தகுதி அறிக்கை பற்றி முழுமையான விவாதங்கள் நடந்தன...ஆனால் , தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம்? பிரதமர் தானாக முன்வந்து வெளியிட்ட பிட்னஸ் வீடியோவை கேலிசெய்து மீம்ஸ் போட்டு நம் அரிப்பை சொறிந்துகொள்கிறோம்...
மேலைநாட்டவர்களிடமிருந்து தேவையற்ற விஷயங்களை இம்மி பிசகாமல் அப்படியே காப்பி அடிப்பதில் பெருமைகொள்ளும் நாம் , அவர்களிடமிருந்து நல்ல விஷயங்களை மட்டும் கற்பதில்லை...இப்படியே நாம் இருக்கும் வரை ''என்ன இருந்தாலும் பாரின் மாதிரி வராது சார்..'' என்று சொல்லிக்கொண்டே திரியவேண்டியதுதான்...
No comments:
Post a Comment