Followers

Wednesday, May 29, 2019

சமையலில் செய்யக்கூடாதவை.


* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

*
காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

*
மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

*
கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

*
காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.  * சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

*
தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

*
பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

*
பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

*
தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

*
குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

*
குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ, காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.
காய்கறிகளிலும் பழங்களிலும் தோலை ஒட்டித்தான் தாதுஉப்புக்களும், உயிர்ச்சத்துக்களும் நிறைந்திருக்கினறன. எனவே, முடிந்தவரை தோலுடன் சமைக்க வேண்டும்.
கீரை வாங்கும்போது மஞ்சள் நிறமுள்ள இலைகள் அதிகமிருந்தால் வாங்குவதைத் தவிர்க்கவும். ஓட்டைகள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் உள்ள கீரைகளையும் வாங்கக்கூடாது.
பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்களில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும். எனவே, இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பாலைத் திரித்து பனீராக்குவதற்கு எலுமிச்சைச் சாறு ஊற்றுவோம்.
அதற்கு பதில் தயிர் ஊற்றி, பாலைத் திரித்தால் பனீர் புளிக்காமல் சுவையாகஇருக்கும்.
பூரிக்கு மாவு பிசையும்போது கால் டீஸ்பூன் ரவையைச் சேர்த்துக் கொண்டால், பூரி புஸுபுஸுவென உப்பலாக இருக்கும்.
எலுமிச்சை சாதம் செய்யும்போது தாளித்ததும் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிட்டால் சாதம் கசந்து போகும். அதற்கு பதில் ஒரு கிண்ணத்தில் எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். அதில் தாளித்ததை ஊற்றிக் கலக்கிய பிறகு, சாதத்தில் சேர்த்துக் கிளறினால், சாதம் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

No comments: