Followers

Thursday, May 9, 2019

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்


ஒரு ஜென் துறவி தன் சீடன் ரோஷியுடன் டீ
குடிக்கச் சென்றார். " ஏன் தான் இந்த ஜப்பானி
யர்கள் டீ கோப்பையை இவ்வளவு மெல்லியதாக
செய்திருக்கிறார்கள்? கை நழுவி கீழே விழுந்தால் உடைந்து போய் விடுமே! இதைக்
கொஞ்சம் பருமனாகச் செய்தால், கீழே
விழுந்தாலும் உடையாதிருக்குமல்லவா!" என்றான். ரோஷி குருவிடம்.
"அவர்கள் கோப்பையை. மெல்லியதாகத்
தயாரித்ததில் குற்றமில்லை. அவற்றை நம்மால்
சரியாகக் கையாளுவது தெரியாததே தவறு.
எந்தப் பொருளையும் நாம் எப்படிக் கையாள
வேண்டும் என்று முழுமையாகத் தெரிந்து
கொள்ள வேண்டும் முதலில். அதை விட்டுக்
குறை கூறுவது தவறு. " என்றார் குரு.
பிறர் குறை தான் நமக்கு முதலில் தெரிகிறது.
நம் குறை நமக்குத் தெரிவதில்லை.
இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன் !!!

No comments: