1. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.
2. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கனவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.
3. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
4.. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.
5. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
6. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
7. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
8. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.
9. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.
10. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.
11. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.
12. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
13. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
14. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
15. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
16. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும்.
நன்றி !!!
No comments:
Post a Comment