Followers

Sunday, August 4, 2019

‘மிஷன் காஷ்மீர்’

காஷ்மீரில் களையெடுக்கும் பணிக்கு, மத்திய அமைச்சர் அமித்ஷா ‘மிஷன் காஷ்மீர்’ என்று பெயர் சூட்டி உள்ளார்.
மிஷன் காஷ்மீர் பணிக்காக அங்கே பணி நிமித்தம் உள்ளவர்கள் போக புதிதாக பல்லாயிரம் ராணுவ வீரர்கள் களமிறங்கி உள்ளனர்!
காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்கும் மகத்தான பணியை கையில் எடுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த ஆண்டு காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அதன் பஞ்சாயத்து தலைவர்களால் கொடியேற்றும் நிகழ்ச்சியை ஆகஸ்ட் 15-இல் நடத்த உத்தரவிட்டுள்ளார்.ராணுவ கண்காணிப்பு மூலமாக நடக்கும் இந்த பணியில் குறுக்கீடுகள் செய்வோர் மண்ணில் இருந்தே அகற்றப் படுவார்கள்!! காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் ஆட்சியாளர்களைப் போல அடக்கி வாசித்து பயங்கரவாதிகளை திமிராய் திரியவிடும் போக்கை பாஜக செய்யாது! தேசிய தலைவர் அமித்ஷா பார்வையில் அத்து மீறுபவர்கள் அடக்கப் படுவது இல்லை! மாறாக ஒழிக்கப் படுவார்கள்! காஷ்மீரின் மண்ணின் மைந்தர்களான பண்டிட்கள் மீண்டும் குடியமர்வு பெறுவார்கள்!! மிஷன் காஷ்மீர் பணியில் இந்திய அணிக்கு உத்வேகம் ஏற்படுத்தி தந்த கிரிக்கெட் வீரர் தோனி அவர்களும் களத்தில் இருப்பதாக செய்தி உள்ளது! விளையாட்டு வீரர் என்பதை தாண்டி நாட்டைக் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தோனி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
இந்தியாவில் இருந்து கொண்டு, இந்திய கடவுச்சீட்டில் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தேசத்திற்கு எதிராக பேசிக் கொண்டு திரிவதை பாரதிய ஜனதா அரசு சகித்துக் கொண்டு கடந்து செல்லாது! வீட்டிற்கும்,நாட்டிற்கும் விசுவாசமாக இல்லை என்றால் உன் மேல் விழுவது அடி இல்லை,அது இடியாகத்தான் இருக்கும்!  

No comments: