ஏற்காட்டிலிருந்து உருவாகி வரும் கல்லாறு தான் மாமரத்து மடுவு .. கொக்கரான் அருவிகளை.
சேலத்தில் உள்ள பலருக்கு இந்த இடம் தெரியவில்லை. நகரத்தில் இருந்து
15 கிமீ உள்ள இந்த இடமே தற்போது தான் சில நண்பர்களால் தெரிந்தது...
15 கிமீ உள்ள இந்த இடமே தற்போது தான் சில நண்பர்களால் தெரிந்தது...
சேலம் டவுனில் இருந்து.... பொன்னாம்மாபேட்டை... (ரயில்வே கேட் தாண்டி) வீராணம் வழியாக...
(காவல் நிலையவழி) D.பெருமாபாளையம் கிராமம்...(15கிமீ) D.பெருமாபளையம் -> காரைக்காடு (2.5கிமீ) (கிராமத்தில் வழி கேட்கவும்) பின் மலை நடைபயணம்.. மாமரத்து மடுவுக்கு (3-4கிமீ)
(காவல் நிலையவழி) D.பெருமாபாளையம் கிராமம்...(15கிமீ) D.பெருமாபளையம் -> காரைக்காடு (2.5கிமீ) (கிராமத்தில் வழி கேட்கவும்) பின் மலை நடைபயணம்.. மாமரத்து மடுவுக்கு (3-4கிமீ)
பேருந்தில் செல்பவர்கள் D.பெருமாபாளையத்திலிருந்து நடந்து செல்ல வேண்டும், பைக் அல்லது காரில் செல்பவர்கள் காரைக்காட்டிலிருந்து இந்த அருவிகளுக்கு நடந்து செல்ல வேண்டும்.
ஏற்காடு மழைகளின் உருவாகி வரும் கல்லாற்றின் நடுவே பல எழில்மிகு அருவிகள் உள்ளன. அவரவர் விரும்பிய அருவிகளில் குளித்து மகிழலாம். நடந்து செல்லும் பாதையும் இயற்கை எழில்மிகு பாதையாக உள்ளது.
ஆண்கள் மட்டும் செல்ல முடியும் என்று நினைத்திருந்தேன், எங்களுக்கு முன்ன பல பெண்களும் குழந்தைகளும் அருவிகளில் குளித்து கொண்டிருந்தனர். தண்ணீரும் நிறைய வந்து கொண்டிருக்கிறது.
குடும்பத்துடன் ஜாக்கிரதையாக சென்று சேலத்தில் உள்ள குற்றாலத்தில் குளித்து.. இயற்கை எழிலை ரசித்து பசுமையை அனுபவித்து வாருங்கள்.
No comments:
Post a Comment