Followers

Friday, July 10, 2020

அமைதியும் ஆனந்தமாகவும் இருங்கள்

இறைவன் படைப்பில் நீங்கள் எதற்காக பூலோகத்திற்கு வந்தீர்களே அந்த கர்ம காலம் முடியும் வரை கரோனா மட்டுமல்ல வேறு எந்த விதத்திலும் உங்களுக்கு மரணம் சம்பவிக்காது.

பயம் கவலைகளை விட்டு நிம்மதியாக வாழுங்கள் ! கர்ம காலம் முடிவுக்கு வந்து விட்டால் கரோனா என்ன ஒரு புல் கூட உன் மரணத்துக்கு காரணமாகி விடும். படைத்த ஆண்டவனே நினைத்தால் கூட உங்களை காப்பாற்ற முடியாது.

கர்ம காலம் முடியாததால் நேருக்கு நேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட MGR & MR ராதா இருவருமே சாகவில்லை ! ஆனால் கட்டுமஸ்தான உடல்  பெற்ற முத்துராமன் ஊட்டியில் காலையில் jogging போகும் போது புல்தரையில் வழுக்கி கீழே விழுந்து மரணமடைந்தார்.

 மகாபாரதத்திலும் இதற்கான உதாரணம் உண்டு. பாண்டவர்களின் பாரம்பரியத்தில் ஆட்சி புரிந்த பரீட்சித் மகாராஜா தன் வாழ்க்கை இன்னும் ஒரு வாரத்தில் முடிய போகிறது அதுவும் நாகம் தீண்டி சம்பவிக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து அதிலிருந்து தப்ப மிகுந்த பாதுகாப்புடன் இருந்தும் ஏழாம் நாள் அவர் பூஜை செய்யும் பூவிலிருந்தோ பழத்திலிருந்தோ வெளிப்பட்ட ஒரு பூநாகம் தீண்டி உயிரிழந்தார் !

 அதனால் நம் கர்ம காலம் முடியும் வரை எதனாலும் நம்மை கொல்லமுடியாது என்ற முழு நம்பிக்கையுடன் பயமில்லாமல் வாழுங்கள் ! பயமே பல நோய்களுக்கு காரணமாகி விடும் !

 அமைதியும் ஆனந்தமாகவும் இருங்கள்

No comments: