Followers

Friday, July 10, 2020

"சமுதாயத்தை கொரோனா நோய் பரவுவதில் இருந்து காக்க தனிமைப்படுத்திக்கொண்ட வீடு" என்று நோட்டீஸ் ஒட்டலாம்.

"தனிமைப்படுத்தப்பட்ட வீடு" என்று நோட்டீஸ் ஒட்டுவதற்குப் பதிலாக

"சமுதாயத்தை கொரோனா நோய் பரவுவதில் இருந்து காக்க தனிமைப்படுத்திக்கொண்ட வீடு" என்று நோட்டீஸ் ஒட்டலாம்.

அவர்கள் தனிமைப்படுத்தும் காலத்தை முடித்த பின்  அவர் வீட்டின் முன்
"நாட்டின் நலம் காத்த குடும்பம். கொரோனாவைவென்ற குடும்பம்"
என்று ஒட்டலாம்.. 

தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பது சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது

தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட வீடு எனும் போது சமுதாயமும் உடன் சேர்ந்து நிற்கிறது

இன்று பக்கத்து வீட்டில் ஒட்டப்படும் நோட்டீஸ் நாளை நமது வீட்டிலும் ஒட்டப்படலாம்

எனவே  பக்கத்து வீட்டுக்காரரை பரிவுடன் நடத்துவோம்.

அவர்களை மனதால் தனிமையில் ஒருபோதும் விட்டுவிட வேண்டாம்

No comments: