Followers

Monday, October 19, 2020

ஸ்ரீமத் பகவத் கீதை

6வது அத்தியாயம் 45ஆவது ஸ்லோகம் இன்றைய சிந்தனை.

மனிதன் தன் மனதை ஒருங்கிணைத்து வாழ்ந்தால் பாவங்கள் நீங்கும். புண்ணி யங்கள் பெருகும். மனிதனுடைய ஆத்மா தாங்கும்.
அந்நிலையிலே அவன் அக்கணமே பரமபதம் அடைக்கின்றான். பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு உபதேசிக்கின்றான். நம்மைப் போன்ற மனிதர்களுக்கும் இதில் சேர்த்தியாகும்.
யோகம் என்பது மனதை ஒருங்கி ணைத்தல் ஆகும். ஒருங்கிணைந்த பேருந்து நிலயம் கேள்விப்பட்டுள்ளோம். அதை தியானித்தல் எனலாம்.
சில நிமிடம் கூட மனதை ஒன்றுபட வைக்க முடிவதில்லை. இதனால் மனிதன் பல ஜென்மங்கள் அடைகின்றான்.
பாவம் + பாவம்-பிறப்பு. பாவம்+புண்ணியம்--மீண்டும் பிறப்பு. புண்ணியம்+புண்ணியம்--மோட்சம்.
இந்த நிலையில் மனிதன் யோகி ஆகி பரமபதம் அடைவதாக பகவான் கீதையில் கூறுகின்றார்.

No comments: