மனு தர்மத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்கிற திருமாவளவன் எம் பி அவர்களின் கருத்தை நானும் ஏற்கிறேன். இந்த நாட்டின் நீதி மன்றங்கள் மனு நீதிப்படி தான் நடக்கின்றன என்று தி க வினர் அவ்வபோது கூறி வருவதில் தவறு இல்லையோ என்று எனக்கும் தோன்றுகிறது.
இதோ பாருங்கள், அத்தியாயம் 8 ஸ்லோ. 337&338 ல் எவ்வளவு அநியாயமாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஒரு சூத்திரன் திருடினால் வெறும் எட்டு மடங்கு தண்டனை தானாம். அதுவே ஒரு பிராமணன் செய்தால் 128 மடங்கு தண்டனை தர வேண்டுமாம்.
எவ்வளவு அநீதி?
ஒரே தவறுக்கு ஜாதி பார்த்து தண்டனை கொடுப்பது முறையா? பிராமணர்களை ஒடுக்கும் இந்த மனு தர்மத்தை தடை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் எம் பி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
#ஜெயலலிதா தண்டனை பெற்றதற்கும் ஆ ராசா விடுதலை பெற்றதற்கும் இது தான் காரணம் என்று தி க வினர் பேச்சை கேட்டு மக்கள் சந்தேகம் கொள்ள மாட்டார்களா?
தடை செய் தடை செய்
பிராமணர்களை வஞ்சிக்கும் மனு தர்மத்தை தடை செய்.
-கார்த்திக் குமார்
No comments:
Post a Comment