Followers

Saturday, August 1, 2020

'மோடிஜிதான் எனக்கு வரவேண்டிய 15 லட்சத்தை இன்ஸ்டால்மெண்ட்டில் போடுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் சார்!'

உத்திரப் பிரதேசத்தில் ஹுகும் சிங் என்று ஒரு விவசாயி இருந்தார். மத்தியப் பிரதேசத்தில் அதே பெயரில் இன்னொரு விவசாயி இருந்தார். இருவருக்கும் எஸ்பிஐ வங்கியில் கணக்கு இருந்தது. நடுவில் ஒரு முறை இருவர் கணக்கையும் எஸ்பிஐ குழப்பி விட்டது. உபி ஹுகும் சிங்கின் டெபாசிட் எல்லாம் மபி ஹுகும் சிங்கின் கணக்கில் சேர்த்து விட்டது. பணம் நிறைய வரவே அவரும் ஜாலியாக செலவழிக்க ஆரம்பித்து விட்டார். ஒரு நாள் வங்கி அதிகாரிகள் தவறை கண்டுபிடித்து திருத்தி விட்டனர். பின்னர் மபி ஹுகும் சிங் வீட்டுக்குப் போய் 'எங்கேர்ந்துயா உனக்கு பணம் வந்துச்சுனு நெனைச்சே?' என்று கேட்க, அவர் அப்பாவியாக 'மோடிஜிதான் எனக்கு வரவேண்டிய 15 லட்சத்தை இன்ஸ்டால்மெண்ட்டில் போடுகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் சார்!' என்றிருக்கிறார்.

இது கூடப் பரவாயில்லை. புரிகிறது. ஆனால் உபி ஹுகும் சிங் ஏன் புகாரே கொடுக்கவில்லை என்று ஆச்சரியமாக அவர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். 'உன் அக்கவுண்ட்ல இருந்து பணம் போச்சுது. ஏன்யா, சும்மா இருந்தே?' என்று கேட்டிருக்கிறார்கள். 'நேருதான் என் அக்கவுண்ட்ல இருந்து பணம் திருடறார்னு நெனைச்சிகிட்டு இருந்தேன் சார்!' என்று பதில் வந்தது!

- வருண் குரோவர், Stand-up Comedian

No comments: