Followers

Monday, August 3, 2020

கடந்த 30 வருடங்களாக நடிகர்களின் பேச்சை கேட்டு முட்டாள்களாகவே மாறி அவர்களை அரசாள அனுமதித்திருக்கிறோம். மீண்டும் அது தொடர்ந்தால் ஓட்டிற்கு காசு வாங்கும் ஈன பிழைப்பை தொடருவதை தவிர வேறு வழியில்லை.


இப்பொழுது ஒரு கூட்டம் நாங்கள் தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாக படித்துள்ளோம் எங்களுக்குத்தான் GER Ratio அதிகமாக உள்ளது, நாங்கள் இந்தியாவைவிட மேல் என்றெல்லாம் கம்பு சுற்றி வருகிறார்கள். 

இந்த  18 வருடங்களாக தமிழ்நாட்டு கல்வியை பார்த்து வருகிறேன். நான் பார்த்த வரையில் நம் தமிழ்நாட்டின் தேர்வுமுறை உண்மையான அறிவை சோதிக்கும் தேர்வு முறை அல்ல . மாணவர்களின் அறிவை வளர்ப்பதை விட்டு அவர்களை தேர்ச்சி பெற வைக்க மற்றும் மதிப்பெண் வாங்க மட்டுமே உதவும் தேர்வுமுறையாக உள்ளது. 

இந்த தேர்வுமுறையில் மிக அதிகமாக மாணவர்களை பட்டம் வாங்க வைக்க மட்டும் தான்  முடியும். சொல்லப்போனால் இது ஒரு ஏட்டு சுரைக்காய்தான் நமக்கு இருந்த தேர்வுமுறையை பற்றி சிறிது விளக்கமாக கூற விரும்புகிறேன்

1. நம் தேர்வுமுறை Blue Print எனப்படும் முறையை பின்பற்றி இருந்தது 

2. Bule print என்றால் எந்த பாடத்தில் எந்த கேள்வியை கேட்க வேண்டும் எவ்வளவு கேள்வி கேட்க வேண்டும், இந்த நம்பர் கேள்வி இந்த பாடத்தில் இருந்து இந்த பிரிவில் இருந்து மட்டுமே கேட்க வேண்டும் என்பதாகும். அதுவும் பட புத்தககத்தில் உள்ள கேள்வி ஒரு எழுத்து மாறாமல் கேட்க வேண்டும் என்ற rule புக் ஆகும்.

3. மாணவனுக்கு ஒரு குறிப்பிட்ட கேள்வி எண்ணில் எந்த கேள்வி வரும் என்று தேர்விற்கு முன்னரே தெரியும்

4. இது ஒரு விதத்தில் கேள்வித்தாளை மாணவனுக்கு முன்கூட்டியே கொடுப்பதற்கு சமம் 

5. மாணவர்கள் கேள்வித்தாளை முழுமையாக படித்ததே இல்லை. தேர்வில் கேள்வியின் முதல் வார்த்தையை பார்த்தவுடன் பதில் எழுத ஆரம்பித்து விடுவான்.

6.  கணக்கு பாடத்தை கூட மனப்பாடம் செய்து எழுதிய அவலம் இங்குதான் நடந்தது

7. இதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு கூற விரும்புகிறேன். ஒரு பிரபல பள்ளியில் படித்த மாணவன் என்னிடம் ஆலோசனை பெற வந்திருந்தான். அவன் +2 கணிதத்தில் 199/200 மதிப்பெண் பெற்றிருந்தான். என் மேசையில் ஒரு கணித Question Bank இருந்தது. அதில் ஒரு கேள்வி Find the Rank of the matrix என்பதாகும். அதை பார்த்தவுடன் சார் இதற்க்கு பதில் மூன்று என்றான். எப்படித்தம்பி கூறுகிறாய்? இதற்க்கு நிறைய calculation செய்ய வேண்டுமே என்றேன். சார் இது எங்கள் book back கேள்விதான் சார் Diagonal element ல் மூன்று lambda வந்தால் பதில் மூன்று சார் என்றான். நாங்கள் அனைவரும் அப்படித்தானே படித்தோம் என்றான். நான் அவனிடம் off digagonal element எண்களை மாற்றினால் பதில் மாறிவிடுமே  என்றேன். அதற்க்கு அவன் சார் அப்படி மாறினால் அதை out of syllabus என்று எங்கள் ஆசிரியர்களே மதிப்பெண் வாங்கி கொடுத்து விடுவார்கள். Rank of the matrix என்று கேள்வி வந்தாலே நாங்கள் மூன்று என்றுதான் பதில் எழுதவேண்டும் என்றான். இதுதான் நம் கல்வியின் நிலைமை.

8. இன்று போட்டித்தேர்வுகளுக்கு போகும் நம் மாணவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் பரவாயில்லை கேள்வியே தெரிவதில்லை என்பதுதான் மிகப்பெரிய பிரச்னை. இதற்க்கு மேல்கூறிய தேர்வுமுறையே காரணம்.

9. இந்த தேர்வுமுறையை வைத்துக்கொண்டு நாங்கள் இவ்வளவு சதவிகிதம் பாஸ் எங்கள் GER Ration இவ்வள்வு என்று பீத்திக்கொள்வது எப்படி முறையாகும்

10. இந்த தேர்வுமுறை அடிமைகளை உருவாக்குவதற்குத்தான்  பயன்பட்டது. சுய சிந்தனை என்பது இல்லாமலேயே போய் விட்டது. இந்த பெருமை பேசும் அனைத்து போராளிகளின் குழந்தைகளும் CBSE பாடத்திட்டத்தில் படிப்பதே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

11. பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தப்பட்டது தமிழ்நாட்டில்தான். பாடத்திட்டத்தின் தரத்திற்க்காக போராட்டம் நடத்தப்பட்டதே இல்லை. அதனால் தான் 14 வருடங்களாக பாடத்திட்டம் மாறாமலேயே இருந்தது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அவர்கள் எழுதிய தேர்வு சார்ந்து இல்லாமல் அரசியல் சார்ந்தும் இருந்தது தான் கொடுமையிலும் மிகப்பெரிய கொடுமை.

12. அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்கள் வழங்கி அவர்களை தேர்ச்சி பெறவைத்து GER Ratio அதிகம் என்று பீத்திக்கொள்வது எப்படி உண்மையான சாதனையாக இருக்க்க முடியும்.
நான் சில கேள்விகளையும் கேட்க விரும்புகிறேன் 
1. GER Ratio அதிகம் உள்ளதை வைத்து நாம் என்ன சாதித்திருக்கிறோம்??

 2. எத்தனை கண்டுபிடிப்புகள் செய்திருக்கிறோம்???

3.  நம் நாட்டிற்கு அதன் மூலம் எவ்வளவு பயனீட்டி கொடுத்திருக்கிறோம்??

4.  எவ்வளவு Patent வங்கியிருக்கிறோம்??

5.  மென்பொருள் துறையில் கூட 30 வருடங்களாக அடிமை வேலைதானே செய்து கொண்டிருக்கிறோம். அடிமை வேலை செய்வதற்காகத்தான் நம் கல்வி முறை மக்களை உருவாக்குகிறதா?

6. அகில இந்திய அளவில் நடக்கும் வேலை போட்டியில் எவ்வளவு வென்றிருக்கிறோம்??

7. விளையாட்டு துறையில் எவ்வளவு சாதித்து இருக்கிறோம்??  கேட்டால் இந்தி பேசுபவர்களின் சதி என்பார்கள். இந்தி பேசாத ஆந்திரா போன்ற மாநிலங்கள் தேசிய அளவில் நடக்கும் போட்டிகளில் வெல்கிறார்களே அது எப்படி??? எடுத்துகாட்டாக நாட்டில் உள்ள IITகளில் 60% மாணவர்கள் ஆந்திராவில் இருந்து மட்டும். அதே போல் தேசிய வேலைவாய்ப்புகளில் அவர்கள் மிக அதிகமாகவே உள்ளார்கள்அது எப்படி??

எனவே வெறும் பெருமை பேசாமல் #NEP 2020 உள்ள குறைகள் எதாவது இருந்தால் அரசுக்கு எழுதுங்கள். இந்திய அரசாங்கம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் சந்ததிக்கும் சேர்த்தே இந்த கல்விக்கொள்கையை 34 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவந்துள்ளார்கள். முதல்முறையாக 6% அரசு வருமானம் கல்விக்கு செலவிடப்பட உள்ளது. கடந்த பல வருடங்களாக கருத்து கேட்டு கிட்டத்தட்ட 2 லட்சம் கருத்துக்களை உள்வாங்கி இதை வடிவமைத்துள்ளார்கள்.  அப்போதெல்லாம் எதுவும் சொல்லாமலே இப்பொழுது சில நடிகர்களின் சொல்லை வேதவாக்காக கருதிக்கொண்டு பேசுவது நம்மையெல்லாம் பெரும் குழிக்குள் தள்ளிவிடும். 

கடந்த 30 வருடங்களாக நடிகர்களின் பேச்சை கேட்டு முட்டாள்களாகவே மாறி  அவர்களை அரசாள அனுமதித்திருக்கிறோம். மீண்டும் அது தொடர்ந்தால் ஓட்டிற்கு காசு வாங்கும் ஈன பிழைப்பை தொடருவதை தவிர வேறு வழியில்லை.

Dr. T. Periasamy., M.Tech., Ph.D (IIT Madras)

No comments: