Followers

Saturday, August 1, 2020

அயோத்தியில் பூமி பூஜை...நியூயார்க் டைம் ஸ்கொயரில் காட்சி தரும் ஸ்ரீ ராமர் புகைப்படம்...வீடியோ...சிறப்பு ஏற்பாடு!!

வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது.நமது பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இதை முன்னிட்டு நியூயார்க் நகரில் இருக்கும் டைம் ஸ்கொயர் பில்போர்டில் ராமரின் புகைப்படங்கள், 3டி படங்கள், வீடியோக்கள் ஆகியவை ஒளிபரப்பப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க இந்தியா பொது மக்கள் விவகாரத்துறை தலைவர் ஜகதீஷ் செவானி கூறுகையில், ''அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடக்கும் நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்ரீ ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

சிறப்பு ஒளிபரப்புக்காக உலகிலேயே மிகப்பெரிய பில்போர்டு அமைக்கப்படுகிறது.
இந்த பில்போர்டின் நீளம் 17,000 சதுர அடியாக இருக்கும். குத்தகையில் பில்போர்டுகள் இந்த நிகழ்வுக்கு என்றே எடுக்கப்படுகிறது. எல்இடி வெளிச்சத்தில் ராமரின் புகைப்படங்கள் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை தொடர்ந்து ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலும், இந்தியிலும் ஒளிபரப்பாகும். கடவுள் ராமரின் புகைப்படம் வீடியோவாகவும், 3டி படங்களாகவும், கோயிலின் கட்டமைப்பு, உள் கட்டமைப்பு ஆகியவையும், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டும் புகைப்படங்களும் ஒளிபரப்பப்படும். இதற்கென பல்வேறு பில்போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. உலகில் இருக்கும் சுற்றுலா தளங்களில் மிகவும் முக்கியமானது டைம் ஸ்கொயர்.

இந்தியர்கள் அன்று டைம் ஸ்கொயரில் கூடி இந்த நிகழ்வை கண்டு களிப்பார்கள். இனிப்புகள் வழங்கப்படும். இந்துக்கள் அனைவருக்கும் இந்த நாள் கனவு நாள். இந்த நாளை இந்துக்களாகிய நாம் அனைவரும் கொண்டாட வேண்டும்.

இது வாழ்நாளில் ஒரு முறை,அல்லது ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை அல்ல,
இது மனிதகுல வாழ்க்கையில் ஒரு முறை வரும் ஒரு நிகழ்வு.

ராமருக்கான கோயில் கட்டுவதை இங்கு தவிர வேறு எங்கும் சிறப்பாகக் கொண்டாட முடியாது.பிரதமர் மோடியின் ஆட்சியில், உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களின் கனவான , அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது உண்மையாகவுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நாள் இவ்வளவு விரைவாக வரும் என நாங்கள் நினைத்ததில்லை. பிரதமர் மோடியின் தலைமை காரணமாக, அந்த நாள் வந்திருக்கிறது.இதனை நாங்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாட விரும்புகிறோம்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


No comments: