உங்களை நீங்கள் ஒரு பாரதீயர் என்று அறிவித்துக் கொள்ள முடிவது ஒருதலை சிறந்த நற்பேறே. உங்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ள இந்த வரத்திற்குத் தகுந்தவர்களாக நீங்கள் இருத்தல் வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் எவரும் தங்களது தாய்நாட்டை விமரிசிக்கக் கூடாது.எந்த சந்தர்ப்பத்திலும் நீங்களும் உங்கள் தாய்நாட்டை நிந்திக்கக் கூடாது.உங்களது கனவில் கூட, உங்களது தாய்நாட்டை மறக்கவோ அல்லது மறுக்கவோ கூடாது. இதுவே உண்மையான நன்றி உணர்வாகும். ஒருவருக்கு நன்றி உணர்வு இல்லை என்றால், ஒரு மனிதனாகப் பிறவி எடுத்து என்ன பயன்? நன்றி உணர்வு இல்லாத ஒருவன், ஒரு தீயவனே. சூரிய நமஸ்கார ஸ்தோத்திரத்தில், சூரிய பகவான், எந்த பாவத்தை மன்னித்தாலும், நன்றி உணர்வு அற்ற பாவத்தை மன்னிக்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஒரு போதும் நன்றி உணர்வைத் தெரிவிப்பதில் தவறி விடாதீர்கள்; ஒரு போதும் எவரும் உங்களை நன்றி கெட்டவர் எனக் குற்றம் சாட்ட வாய்ப்பளித்து விடாதீர்கள். நீங்கள் பாரத கலாசாரத்தின் மகிமையை மேம்படுத்தப் பாடுபட வேண்டும். ஒருவரது தாயும், தாய்நாடும், சொர்க்கத்தை விடவே தலை சிறந்ததாகும்.
- ஸ்ரீ சத்ய சாயி, மே 27, 2000
No comments:
Post a Comment