09.09.2024
காலை 6.45 மணிக்கு மதுரை இரயில் நிலையம் சென்றடைந்தோம். வந்தே பாரத் வரும் நேரம் 7.40 என்றாலும் லக்கேஜ் மற்றும் பெரியவர்கள் இருந்ததாலும் வண்டி ஐந்து நிமிடம் மட்டுமே நிற்கும் என்பதால் முன் கூட்டியே சென்றோம். லக்கேஜ்களை போர்ட்டர் உதவியுடன் வண்டியில் ஏற்றி விட்டு நிம்மதியாக அமர்ந்தோம். காலை டிபன் ரவை கேசரி, உப்புமா மற்றும் தேநீர் வழங்கினார்கள். மதிய உணவாக சப்பாத்தி, சிறிது அரிசி சாதமும் வழங்கினார்கள். பின்னர் டாக்ஸி பிடித்து கொண்டு மீனம்பாக்கம் விமான நிலையம் சென்று இரவு காசி சென்றடைந்தோம். டிராவல்ஸ் வேன் மூலம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டல் சென்று அவரவர் அறைக்கு சென்று உறங்க சென்றுவிட்டோம். தேஜஸ் வண்டியில் பயணம் செய்திருந்தாலும் வந்தே பாரத் வண்டியில் பயணித்தது முதல் முறையாகும்.விமானப் பயணமும் முதல் முறையாகும். எவ்வித பயண அலுப்பும் தெரியவில்லை.
ஓம் நமசிவாய !
No comments:
Post a Comment