11.09.24
காசியில் காலை குளித்து காலை உணவு உண்டபின் புதிய வழிகாட்டி சிவம் என்பவருடன் குளிர்சாதன வேனில் புத்தகயா புறப்பட்டோம்.
மதிய உணவு ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த ஹோட்டலில் உண்டபின் பயணம் தொடர்ந்தோம். புத்த கயா சென்றடைய மாலை நேரம் ஆகிவிட்டது. புத்த கயாவில் புத்தர் சிலை மற்றும் புத்தர் கோயில்களை பார்த்த பின்னர் புத்தர் ஞானம் பெற்ற போதிமரம் பார்த்தோம். புட்டபர்த்தி சென்ற உணர்வு ஏற்பட்டது. போதி மரத்திற்கு அடுத்து இருந்த ஜெகன்னாதர் ஆலயம் சென்று வழிபட்ட பின்னர் புத்த கயா ரெஜன்சி என்ற தங்கும் விடுதிக்கு சென்றோம். விடுதி நிர்வாகத்தினரால் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இத்தகைய வரவேற்பினை வீடியோ எடுத்திருக்க வேண்டும். தவறிவிட்டது குறையே. இக்குறையை டிராவல்ஸ்
நிறுவனத்தினரிடம் தெரிவிக்கவேண்டும்.
இரவு உணவருந்தி தூங்க கிளம்பி விட்டோம்.
நான்காம் நாள்..12.09.24
கயா மற்றும் காசி
காசியில் கங்கா ஆரத்தி மற்றும் காலபைரவர் கோவில் செல்ல இயலாததால் கயாவில் திதி முடித்து விஷ்ணுபாத கோவிலை தரிசித்த பின் வேன் மூலம் காசி புறப்பட்டு மாலையில் காசியில் உள்ள ஹசி காட்டிற்கு சென்று கங்கா ஆரத்தி கண்டு களித்தோம். ஆரத்திக்கு முன் மந்திரம் சொல்லப்பட்டது பெருமாள் மற்றும் கிருஷ்ணர் பாடல்களும் பாடப்பட்டது. ஆரத்திக்கு முன் அவரவர் கோத்திரம் நட்சத்திரம் பெயர் சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள்..சாய்பிரசாத் பெயர் நட்சத்திரம் சொல்லியும் பிரார்த்தனை செய்து கொண்டேன். ஆரத்தி நடக்கும் சமயம் கங்கை ஆற்றில் விளக்குகள் மின்ன படகுகள் சென்ற காட்சி கண்ணுக்கு விருந்தாக இருந்தது. ஆரத்தி நிகழ்ச்சிகள் அருமையாகவும் பக்திபரவசம் ஊட்டுவதாகவும் இருந்தது. பின்னர் ஆட்டோவில் பயணித்து சின்னஞ் சிறு வீதியின் வழியாக நடந்து சென்று கால பைரவரை தரிசித்த பின் விடுதிக்கு சென்று இட்லி மற்றும் தோசை உண்டபின் உறங்கச் சென்றோம் .
No comments:
Post a Comment