Followers

Monday, October 28, 2024

காசி யாத்திரை - இரண்டாம் நாள்

 10.09.24

காசியில் காலை சிவாலய படித்துறைக்கு சென்று ஸ்னானம் செய்த பின் கங்கை ஆற்றில் படகு சவாரி செய்து கொண்டே அனைத்து படித்துறைகளையும்  கண்டு களித்தோம்.  பின்னர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்று  காலை உணவை முடித்துக் கொண்டு காசி விஸ்வநாதரை தரிசனம் செய்ய புறப்பட்டோம். ஸ்பெஷல் தரிசன டிக்கெட் வாங்கி கொண்டு காசிநாதரை தரிசித்து அருளாசி பெற்றபின் கோவிலுக்குள் இருந்த உடுப்பி டு மும்பை என்ற உணவகத்தில் மதிய உணவு அருந்திவிட்டு காசி விசாலாட்சி கோவிலுக்கு சென்று அம்மனை தரிசித்து பின் செட்டியார் கடை மற்றும் அருகில் இருந்த பரிமளா சேலை கடையில் ஷாப்பிங் செய்து அறைக்கு திரும்பி துர்கா கோயில், துளசி மானஸ் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தோம். தரிசனத்திற்கு பின் ஆட்டோவில் ஏறி ஹசிகாட் அடைந்த போது  கங்கா ஆரத்தி முடிந்து மக்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.  அன்னபூரணி கோவில்,காலபைரவர் கோவில்,சங்கட்மோட்சன்,பிர்லா மந்திர் போன்ற கோவில்கள் பார்க்க இயலவில்லை. அன்று எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த நபரின் தவறான வழிகாட்டுதலால் இந்த தவறு நடந்து விட்டதை டிராவலரிடம் தெரிவித்த பின் வேறொரு வழிகாட்டியை நியமிப்பதாக தெரிவித்தார்கள். மேலும் புத்த கயா, கயாவை மறுநாள் சுற்றி பார்த்தபின் காசியில் ஆரத்தி மற்றும் காலபைரவர் கோவிலுக்கு செல்லலாம் என உறுதி அளித்தனர்.  இரவு அவரவர் அறையில் ஓய்வெடுக்க சென்றோம். காசியில் தெருக்கள் மிக குறுகியதாகவும் அந்த குறுகிய சந்திலும் இரண்டு சக்கர வாகனங்களை இவ்வூர் மக்கள் ஓட்டிக் கொண்டு வருவது எரிச்சலாக இருந்தாலும் புதிய அனுபவமாக இருந்தது.

ஓம் நமசிவாய !

No comments: