Followers

Wednesday, March 26, 2008

Puttaparthi - Part I







மதுரை பையன் பகவானின் ஆசியுடன் வழங்கும்
வாருங்கள் யாத்திரை செல்வோம்”
புனித சேத்திரம் புட்டபர்த்தி(சாயி அன்பர் திரு ஆர்.என்.எஸ் அவர்களின் படைப்பில் உதித்த ஒரு மொட்டு)

அட்சய அண்டு கார்த்திகை திங்கள் சோமவாரம் திருவாதிரை நட்சத்திரம் கூடிய புனித நாளில் (23.11.1926) வெங்கப்பராஜ், ஈஸ்வராம்பா அவர்களின் திருக்குமரனாக தம்மை தோற்றுவித்துக் கொண்டு இப்புவனத்தில் சத்ய ,தர்ம, சாந்தி, பிரேமை அகிம்சை, ஆகிய குண நல மேம்பாட்டின் மூலம் நமக்கெல்லம் புனர் வாழ்வு கொடுத்து நம்மை பகவான் தம் ஸ்தூல சரீரத்துடன் அருளாட்சி செய்துவரும் அவதர சேத்ரமாம் (ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம்)(Andhrapradesh-Ananthapur District) புனிதமிகு புட்டபர்த்தி பற்றி சற்று சிந்திப்போமாக!
(குறிப்பு : பெங்களூர் – தர்மாவரம் வழியாக ரயில் பச் மூலம் புட்டபர்த்தி சேத்திரம் அடையலாம்
புட்டபர்த்தி ஒரு புண்யசேத்ரம் என்பதற்கு அறிகுறியாக எழில்மிகு பிரசாந்தி நிலைய ஆலயமும் - பாபா அவர்கள் அவதரித்த சிறிய வீட்டை சிவன் கோயிலாக கட்டிருப்பதும், சத்யபாமா கோயிலும் - கோபல் சுவாமி - ஆஞ்ஜனேயர் கோயிலும், (Sivan Temple, Sathyabama Temple, Gopal Swamy Temple,Anjaneyar Temple) பாபா முன்பு தங்கிய பாதமந்திரமும் - கல்யாண மண்டபமும் - அவர்தம் இளமைப் பருவத்தில் விளையாடியதும் - பல அதிசயங்களுக்கும், ஆன்மீக விளக்கங்களுக்கும் இடமாகிய சித்ராவதி நதி (Chitravathi River)மணல் மேடும் - அவ் ஆற்றங்கரையின் குன்றின்மேல் உள்ள ஓர் புளிய மரத்திலிருந்து(Tamarind Tree) சிறுவர்க்ளுக்காக தம் அதிசய ஆற்றலால் பலவகை பழங்கள் வரவழைத்து கொடுத்த மகிமை பொருந்திய “கற்பக விருட்சமும்” – பாபாவின் தாய் – தந்தை சமாதிக்கட்டடமும், ஆரம்ப (Primary SchooL)கல்லூரி (College)வரை மாணவர்களுக்கு இலவசமாய்க் கற்றுத்தரும் தங்கும் வசதியுடன் கூடிய கவின்மிகு கல்விக்கூடங்களும்(Educational Institution) “ விண்வெளிக் காட்சியகம்” எனும் ப்ளானடோரியமும்(Planetarium) “சாயி கீதா” எனப் பிரியமாக அழைக்கப்படும் யானையின் இருப்பிடமும் காங்கயப் பசுக்கள் அடங்கிய கோகுலம் கட்டடமும் அதன் அருகில் சங்கீத கட்டடமும் அதன் பின்புறம் திறந்த வெளிப்பேரரங்கும் (Hill view Stadium) குன்றின்மேல் அமைந்துள்ள யுனிவர்சிட்டி ஆபிஸ் (Univsersity Office)முன்புறம் 110 அடி உயரம் கொண்டதும், தரை தளத்தைச் சேர்த்து மூன்று தளங்கள் கொண்ட ஆன்மீக விளக்கங்கள் பற்பல முறைகளில் படம் பிடித்துக் காட்டும் அருமையான (Museum) அருங்காட்சியகமும், தியானம் (Meditation)செய்வதற்குரிய மகிமை பொருந்திய வட விருட்சம் உள்ள மேடையையும் அதன் கீழ் அமைந்துள்ள பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இல்வச மருத்துவமனையும், (Hospital)அதன் பின்புறம் “வித்யாகிரி” எனும் குன்றின் மேல் எழுப்பப்பட்டுள்ள 65 அடி உயரம் கொண்ட “சஞ்ஜிவி பர்வதம்” ஏந்திய ஆஞ்ஜநேயர் சிலையும், அதன் கீழ் அமைந்துள்ள கிருஷ்ணர்-பரமேஸ்வரர்-யேசுனாதர்-ஜோராஷ்ட்ரர் ஆகிய எழில் மிகு சிலைகளும், பிரசாந்தி ஆஸ்ரம வளாகதில் சுமார் 20 ஆயிரம் பேர்வரை வசதியாக உட்கார்ந்து கொள்ளக்கூடியதும், நடுவில் தூண் எதுவும் இல்லமல் கலைநுணுக்கத்துடன் கட்டப்பட்டுள்ள “பூர்ணசந்த்ர ஹாலும்”, அதன் பக்கத்தில் பாபாவின் அற்புத மகிமைகளை பாரெங்கிலும் விளக்கிக் காட்டும் பற்பல மொழிகளில் பிரசுரம் ஆகியிருக்கும் நூற்களை விற்க்கும் நூல்நிலையமும்-(Library)அலுவலகங்களும்-அவற்றின் எதிரில் நிறைய பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் உணவு விடுதியும், அவ்வாளகத்தில் நிரந்தரமாய் தங்கியிருப்போர்க்கு வசதியாக கட்டித்தரப்பட்டுள்ள வீடுகளும்,அன்றாடம் வெளி நாட்டினர் உட்பட பல்லாயிரக்கணக்கில் வரும் பக்தர்கள் தங்கிக் கொள்வதற்காக சகல வசதிகளும் கொண்ட பல்வேறு மாதிரிகளில் கட்டப்பட்டுள்ள நவீன அடுக்கடுக்கான மாடிக் கட்டிடங்களும் சுமார் 250 பேர் ஒருங்கே தங்கிக் கொள்வதற்கேற்ற தனித்தனி ஸெட்களும், வளாகத்தில் நடுநாயகமாய்க் காட்சிதரும் கவின்மிகு “சர்வ மத ஸ்தூபியும், அண்மையில் பிரசாந்தி மந்திர் முன்புறம் பிரமாண்டமாய் கட்டப்பட்டுள்ள, இக் குவலயமே போற்றும் “குல்வந் ஹாலும்”. சர்வமத ஸ்தூபி அருகில் அமைந்துள்ள, நம் கலியுக அவதாரம் சத்ய சாயி பகவான் தம் ஸ்தூல சரீரத்துடன் தங்கியிருக்கும் (அமைதியின் ஆழத்தில் நாம் இறைவனைக்காணும்) அவர்தம் இனிய இருப்பிடமும் பார்க்கப்-பார்க்க நமுக்கு பரிபூரண ஆனந்தம் கிடைக்கும்.
-தொடரும்...........






No comments: