Followers

Friday, June 25, 2010

Ravanan - A flim by Manirathnam - Review



விக்ரம் தங்கை பிரியாமணி. அண்ணன் பிரபு, தம்பி முன்னா என உறவினர்களோடு வாழ்பவரை போலீசார் சட்டவிரோதி என கருதி பிருதிவி ராஜ் தலைமையில் வேட்டையாட வருகிறார்கள். விக்ரம் தங்கை பிரியாமணியின் திருமணத்தின்போது வரும் போலீசார் விக்ரமை சுட்டுவிட்டு, ப்ரியாமணியை கடத்திக் கொண்டுபோகிறார்கள். கற்பழிக்கிறார்கள் . நடந்த கொடுமையை அண்ணனிடம் சொல்லிவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார் ப்ரியா மணி. இதற்குப் பழிவாங்க, பிருத்விராஜின் மனைவி ஐஸ்வர்யாராயை கடத்திக் கொண்டு வருகிறார் விக்ரம். 14 நாட்கள் தன்னுடன் வைத்திருக்கிறார். அவரை மீட்க பிருத்விராஜ் போலீஸ் படையுடன் வருகிறார்... விக்ரமுடன் மோதுகிறார். அசோக வனக் காட்சிகள். பல இடங்களில் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் பிரமிப்பைத்தருகிறது. இப்படிக் கூட எடுக்க முடியுமா என மலைக்க வைக்கும் காட்சிகள்...மணிகண்டன் & சந்தோஷ்சிவன் நன்கு உழைத்திருக்கிறார்கள். பின்னணி இசையில் சிறிதாவது மெனக்கெட்டிருக்கலாம் Oscar நாயகன். மணிரத்னம் படத்தில் கோட்டை விட்டிருக்கிறார். விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு ஒரு சபாஷ்! ஐஸ்வர்யாராயை அழகாக படம் பிடித்திருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சி தவிர, மற்ற இடங்களில் ஐஸ்வர்யாராயின்அழகே அழகு. மணிரத்னம் படம் என்பதால் எப்போதும் ஒரு எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும். அந்த வித்யாசத்தை எதிர்ப்பார்த்துப் போனவர்களுக்கு இந்தப்படம் செமத்தியான ஏமாற்றம். படத்தின் ஒளிப்பதிவுத் தரம் மற்றும் ஐஸ்வர்யாராய்க்காக ஒரு முறை பார்க்கலாம். ஒரு சாதாரண சராசரிபடமாக அமைந்து விட்டது ஏமாற்றமே !

3 comments:

Anonymous said...

nice to see ur reviwe abt raavanan.... :) well ll see the film 1st and then ll comment about it to u

Anonymous said...

I have never expected such a stupid movie from Mani.

SARAVANA PRAKASH said...

I was expecting Naxalism to be portrayed in Ravaan film, since, many of his previous films have focussed on contemporary issues of that time.
Seems quite different film against my expectations.