Followers

Friday, September 24, 2010

அரிசி கடத்தல்

அலுவலக வேலையாக லோயர்காம்ப் செல்ல வேண்டியிருந்தது. கம்பத்திலிருந்து குமிளி செல்லும் தமிழக அரசுப் பேருந்தில் பயணம் மேற்கொண்டேன். அப்பொழுது ஏழை அப்பாவி பெரியவர் ஒருவர் கையில் ஒரு சின்ன அட்டைப்பெட்டியுடன் ஓடும் வண்டியில் ஏற முற்பட்டார். நடத்துனர் வண்டியை நிறுத்தி பெட்டியில் என்ன இருக்கு என்று கேட்டார். மிளகாய் பொடி இருக்கிறது என்று கூறி , குமுளிக்கு ஒரு டிக்கட் வாங்கி கேட்டு அமர்ந்தார். குமுளி கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஊராகும். வண்டி கிளம்பி ஐந்து நிமிடம் கழித்து நடத்துனர் மீண்டும் பெரியவரிடம் வந்து அட்டைப்பெட்டியில் என்ன இருக்கிறது? உண்மையைச் சொல் என்று கேட்டார். அதற்கு பெரியவர் மிளகாய் பொடி என்று கூறினார். நடத்துனருக்கு சந்தேகம் வந்து அட்டைப்பெட்டியில் என்ன இருக்கிறது என்று சோதித்துப்பார்த்தார். அதில் அரிசி இருப்பது தெரிந்ததும் கோபம் கொண்டு வண்டியிலிருந்து இறக்கி விட்டார். டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பாவமாக இருந்தது. இது அரிசிக் கடத்தலா? ஒன்றும் புரியவில்லை.(பெட்டியில் மிஞ்சிப்போனால் நான்கு அல்லது ஐந்து கிலோ இருக்கும். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்பதால் அரிசி மட்டும் சமைத்து சாப்பிட முடியுமா? விற்கும் விலைவாசிக்கு பருப்பு,எண்ணெய், காய்கறி வாங்க முடியுமா? அதற்காகத்தான் கேரளாவிற்கு அரிசியை அதிக விலைக்கு விற்று பருப்பு,எண்ணெய், காய்கறி வாங்க நினைத்தாரோ?????)

கொசுறு செய்தி : அரசு ஊழியர்களூக்கு பத்து சதவிகித அகவிலைப்படி உயர்வு!!!!!

No comments: