Followers

Wednesday, August 20, 2014

சர்க்கரையை கட்டுப்படுத்தும் பாகற்காய்ப் புட்டு


தேவையானவை: பாகற்காய் - 5, கடலைப் பருப்பு - அரை கப், வெங்காயம் - 2, சோம்பு தூள், கடுகு, மிளகாய் தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 இலை, உப்பு - தேவைக்கேற்ப, பச்சை மிளகாய் - 2, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: பாகற்காயைச் சிறுதுண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். கடலைப் பருப்பை ஊறவைத்து தண்ணீர் அதிகம் சேர்க்காமல் மிக்ஸியில் அரைக்கவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பாகற்காய் வெந்ததும் நீரை வடித்து பிழிந்து கொள்ளவும். கடலை மாவையும், பாகற்காயையும் வதக்கவும். இதில், உப்பு, மிளகாய் தூள் தூவிக் கிளறவும். புட்டு வதங்கியவுடன் நல்ல மணம் பரவும். அடுப்பை அனைத்துவிட்டு சோம்புதூளைத் தூவி இறக்கவும்.
பலன்கள்: பாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. இதன் கசப்புதான் இனிப்பைக் குறைக்கும் மருந்தாக இருக்கிறது. கசப்பு என்பதால், சிலர் சர்க்கரை சேர்த்து, பொரியல் செய்வார்கள். சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்கலாம்.

Vikatan

No comments: